நீங்க எந்த நிறத்தில் பர்ஸ் உபயோகிக்கின்றீர்கள்! இந்த நிறத்தில் மட்டும் வேண்டாம்! எச்சரிக்கை

பணத்தை வைக்க வேண்டும் என்று நினைத்தால் நமது மனதில் முதலில் நினைவிற்கு வருவது பர்ஸ்தான்.

நமது பணம் நமது கைகளில் இருப்பதை விட பர்ஸில் இருப்பதுதான் அதிகம்.

எனவே அதனை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் உங்கள் பர்ஸின் நிறம் எப்படி உங்கள் நிதி நிலையை பாதிக்கும் என்று பார்க்கலாம்.

தங்க நிறம்
தங்க நிற பர்ஸ் வைத்திருப்பது சக்திவாய்ந்த ஆற்றலை பரவச்செய்யும். இது அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதுடன், வலிமையையும் குறிக்கிறது.

சூதாட்டத்தை விரும்புபவர்களும், விரைவில் பணம் சம்பாரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த நிற பணப்பையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

பிங்க்
பெண்களுக்கு பிடித்த நிறமான இந்த வண்ணத்தில் பெண்கள் பர்ஸ் வைத்துக்கொள்வது அவர்களின் அதிர்ஷ்டத்தை இருமடங்காக்கும். பொதுவாக பிங்க் நிறம் பணம் மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடையதாகும்.

கருப்பு

அனைத்து நிறங்களையும் விட வலிமை வாய்ந்த நிறமாக கருதப்படும் கருப்பு நிறம் பணத்தை சேமிக்கும் ஆற்றலை அதிகம் கொண்டுள்ளது.

பணப்பிரச்சினையால் தவிக்கும் எவரும் உடனடியாக கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பதை தொடங்குவது நல்லது.

இது உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும். இது பணத்தை சேமிக்கும் தவிர அதிகரிக்காது, இதனை உபயோகிக்க தொடங்கும் முன் அதனை மறந்து விடாதீர்கள்.

சிவப்பு
சிவப்பு என்பது நெருப்பின் அறிகுறியாகும். இது உங்களிடம் இருக்கும் அனைத்தையும் எரித்து விடும், உங்களுடன் பிறந்த அதிர்ஷ்டத்தையும் சேர்த்துதான். இதனால்தான் எப்பொழுதும் சமயலறையில் பணத்தை வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்த இடம் முழுவதும் சிவப்பு நிறத்தால் சூழப்பட்டிருக்கும்.

நீலம்
இது சிவப்பு நிறத்திற்கு முற்றிலும் எதிர்மறையானது. இது நீரின் அடையாளமாக கருதப்டுகிறது. இது அனைத்தையும் மூழ்க வைக்கும்குணம் குணம் கொண்டதாகும். இது உங்களிடம் இருக்கும் அனைத்து செல்வத்தையும் இழக்க வைக்கும்.