இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம்! கடும் உக்கிரத்தில் ஆட்டிப்படைக்க போகும் சனி? யாரை தெரியுமா?

இந்த வாரம் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் உள்ளது. சூரியன் ராசி மாற்றத்தினால் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

மிதுனத்தில் ராகு, சிம்மம் ராசியில் சூரியன், செவ்வாய், கன்னி ராசியில் சுக்கிரன், புதன் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

வார மத்தியில் கன்னி ராசிக்கு சூரியன் நகர்கிறார். விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சந்திரன் கும்பம், மீனம், மேஷம் ராசிகளில் சஞ்சரிகிறார். அந்த வகையில், இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் இந்த வாரம் எப்படி என்று பார்க்கலாம்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேஷம்
எதிர்பாரத உதவிகள் கிடைக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளினால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தொழில் நன்மைகள் நடக்கும். வேலையில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் வழியில் நன்மைகள் அதிகம் நடக்கும். முயற்சி ஸ்தானத்தில் இருக்கும் ராகுவினால் செய்யும் முயற்சிகள் வெற்றிகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவார்.

கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆறாம் வீட்டில் புதன் ஆட்சி பெற்று அமர்வதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பாக்ய சனி கேது நன்மைகளை தருவார்கள். இந்த வாரம் நீங்கள் பெருமாளை வணங்கவும் பாதிப்புகள் குறையும். விநாயகரை செவ்வாய்கிழமை வழிபடுவது நன்மையை ஏற்படுத்தும்.

ரிஷபம்
குரு ஏழாம் வீட்டில் இருந்து ராசியை பார்க்கிறார். பணவரவு தாராளமாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. காரணம் வாக்கு ஸ்தானத்தில் ராகு பாதிப்பை தருவார். உணவு விசயத்தில் கவனம் தேவை. பஞ்சம ஸ்தானத்தில் ராசி நாதன் சுக்கிரன் நீச பங்க யோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். மிகப்பெரிய யோகத்தை தரும்.

காதல் திருமணம் வாழ்க்கை. எதிர்பார்க்காத ஆசைகளை நிறைவேற்றுவார் சுக்கிரன். புதன் பணப்பிரச்சினையை தீர்ப்பார்.

திறமை வித்தை புகழை அறிய வைப்பார். கல்வி திறமையை வெளிப்படுத்துவார். சுக ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வீடு வண்டி வாகனம் வாங்கலாம். திருமணம் கை கூடி வரும். மாணவர்களுக்கு குரு பார்வையால் நன்மை நடக்கும். சண்டை சச்சரவுகள் மறையும். கணவன் மனைவி இடையே உற்சாகமான புரிதல் வரும் நெருக்கம் கூடும்.

மிதுனம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரிகளிடையே கருத்து வேறுபாடுகள் மறையும். நன்மைகள் அதிகம் நடைபெறும். தாய் வழி உறவுகளிடையே இணக்கமான நிலை ஏற்படும். பேச்சுத்திறமையால் இன்றைக்கு பல சாதனைகள் செய்வீர்கள்.

காரணம் முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். சுக ஸ்தானத்திஙல செவ்வாய் இருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவால் நன்மைகள் நடைபெறும். சனி கேது ஏழாம் வீட்டில் இருப்பதால் கூட்டுத்தொழில் நன்மையை ஏற்படுத்தும்.

முடிந்தவரை மற்றவர்கள் விசயத்தில் தடையிட வேண்டாம். தம்பதியர் இடையே இணக்கமான நிலை ஏற்படும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்து வெற்றி பெறலாம். கண்டச்சனி கவலையை ஏற்படுத்துவார் கவனம். அம்மன் வழிபாடு துர்க்கை வழிபாடு சாதகமான பலனைத் தரும்.

கடகம்
பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். சுக்கிரன் புதன் கூட்டணி மூன்றாம் வீட்டில் இருப்பதால் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் கூடும். எதிரிகள் தொல்லை தீரும் கடன்கள் விலகும் நல்லது தேடி வரும். செல்வம் பெருகும்.

சகோதர சகோதரிகளின் உறவுகள் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குரு பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமணம் கை கூடி வரும். படிப்பில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணம் வரும்.

ஆறாமிட சனி அற்புத மாற்றங்களை ஏற்படுத்துவார். உதவும் தாராள மனப்பான்மை கொண்ட கடக ராசிக்காரர்களே.., புதிய தொழில் தொடங்குவீர்கள். வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். சூரியன் முயற்சி ஸ்தானத்தில் உள்ளது. குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். அம்மன் வழிபாடு அற்புதத்தை தரும்.

சிம்மம்
உங்க ராசிநாதன் ராசியில் ஆட்சி பெற்று இருப்பதால் நினைத்ததை நிறைவேற்ற வைப்பார். திட்டங்களை செயல்படுத்த வைப்பார்.

ஆரோக்கிய அதிபதி செவ்வாய் பலமான நிலையில் இருக்கிறார். உங்க ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கிறார் நிதானமாக இருங்கள். சின்னச் சின்ன பிரச்சினைகளை எளிதில் எதிர்கொள்வீர்கள்.

முன்கோபத்தை குறைத்துக்கொண்டு நிதானமாக செயல்படுங்கள். செவ்வாய் கூடுதல் தைரியத்தை தருவார். வீடு மனை வாங்கும் முயற்சியில் வெற்றி பெற வைப்பார். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.

வருமானம் அதிகரிக்கும். கடன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சுபமாக இருக்கும். வீடு கட்டுவது, சொத்து வாங்குவது என பல அற்புத பலன்களை தருவார்.

தன ஸ்தானத்தில் சுக்கிரன் புதன் இருப்பது அனுகூலம். 11ஆம் வீட்டில் ராகு இருப்பது வளமான அமைப்பு. ராகு வருமானத்தை அதிகரிப்பார். கேது பகவான் ஐந்தாம் வீட்டில் சனியோடு குரு வீட்டில் இருப்பதால் பொருளாதார மேம்பாடு கிடைக்கும். உங்களின் பலம் அதிகரிக்கும். அதே நேரத்தில் உங்களின் கையிருப்பு கரையும். செல்வாக்கு மட்டுமல்ல சொல்வாக்கும் அதிகரிக்கும்.

கன்னி
ஜென்ம ராசியில் புதன் சுக்கிரன் சஞ்சரிக்கின்றனர். சூரியன், செவ்வாய் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். சின்னச் சின்ன தடைகள் தாமதங்கள் ஏற்படும். கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வரும் என்பதால் நிதானமாக இருங்கள். விரைய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் இணைந்திருப்பதால் செலவுகள் அதிகம் இருக்கும். சுப செலவுகளாக மாற்றுங்கள்.

சகோதர சகோதரிகளுக்கு அதிக செலவுகளை செய்வீர்கள். அம்மாவிற்கு இருந்து வந்த பாதிப்புகள் விலகும். ராசியில் புதன் ஆட்சி பெற்றிருப்பதால் தன்னம்பிக்கை கூடும். முகத்தில் பொலிவு கூடும். இதுநாள்வரை பட்ட கஷ்டங்கள் நீங்கும் விடிவு காலம் பிறக்கப் போகிறது.

பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். அர்த்தாஷ்டம சனியால் சில பாதிப்புகள் வரலாம். தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படலாம். சந்திராஷ்ட நாட்களில் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம்.

துலாம்
இந்த வாரம் அற்புதமாக இருப்பீர்கள். லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வருமானத்தில் லாபத்தை தரும். முன்னேற்றம் இருந்தாலும் செலவுகளும் வரும். விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் இணைந்திருப்பதால் செலவுகளை கட்டுப்படுத்தவும், சுப செலவுகளாக மாற்றுங்கள். தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம். தன ஸ்தானத்தில் குரு இருப்பதால் வருமானமும் முதலீட்டில் லாபமும் அதிகம் நடக்கும்.

கூடவே செலவுகளும் வரும். தாராள தன வரவால் கஷ்ட நஷ்டங்கள் குறையும்.பெரிய மனிதர்கள் ஆதரவு உரிய நேரத்தில் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சுபமாக நடைபெறும். உங்க தைரிய ஸ்தானத்தில் சனியும் கேதுவும் இருக்கின்றனர் அற்புதமான பலன்கள் கிடைக்கும். சந்திராஷ்டம நாட்களில் கவனம் தேவை. பெருமாளை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்
சுக்கிரன், புதன் சஞ்சாரம் லாபத்தை கொடுக்கும். சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் நன்மைகள் நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். பேச்சில் பொறுமை தேவை. உடல் இருப்பவர்களை அனுசரித்து போங்க. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதர சகோதரிகள் ஒத்துழைப்பு தருவார்கள். சொத்துக்களை விற்பதால் பணம் வரும்.

தொழில் மீதான மதிப்பும் மரியாதையும் கூடும் வெற்றியும் வளமும் கூடும். மாணவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும் மேற்படிப்புக்கு நன்மைகளை ஏற்படுத்தும். குடும்ப ஸ்தானத்தில் சனி இருப்பதால் பிரச்சினைகள் வரும் விட்டுக்கொடுத்து போவதன் மூலம் குடும்ப பிரச்சினையை தீர்க்கலாம்.

தனுசு
சூரியன் வலுவாக இருக்கிறார் தோஷங்கள், தடைகள் குழப்பங்கள் நீங்கும். தடைகள் நீங்கும். நன்மைகள் நடைபெறும். உங்கள் மனக்கவலைகள் மறையப்போகிறது. குடும்பத்தில் மன நிம்மதி இல்லாத நிலையில் இருந்தது.

இனி கவலை வேண்டாம். வரவு வரும் போது செலவு வருகிறதே என்று கவலை வேண்டாம். சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் நகைகளை வாங்குவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு குரு நன்மையாக இருக்கிறார். புதன் ஆட்சி உச்சம் பெற்றுள்ளதால் மேற்படிப்பு உற்சாகமாக இருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும்.

உடன் இருப்பவர்களிடம் அன்பாக இருப்பீர்கள். வியாபார ரீதியாக நன்மைகள் நடைபெறும். பேச்சில் நிதானம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணம் விசயத்தில் கட்டுப்பாடு தேவை. இந்த வாரம் முருகன் வழிபாடு நன்மை செய்யும். ஜென்ம சனி சில பிரச்சினைகளை ஏற்படுத்துவார் என்பதால் வியாழக்கிழமை ஆஞ்சநேயரை வணங்குங்கள்.

மகரம்
கோபத்தோடு எந்த முடிவும் எடுக்காதீங்க. பொறுமையோடு இருங்க. வண்டி வாகனத்தில் போகும் போது ஹெல்மெட் போட்டுட்டு மெதுவாக ஓட்டுங்கள். நெருப்பு, மின்சாதனங்களில் கவனமாக இருங்க.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி கொடுக்கவே கொடுக்காதீங்க. லாப குரு உன்னதங்களை தருவார். பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் புதன் சஞ்சரிப்பது ஏற்றத்தை தரும். முயற்சிகளில் முன்னேற்றங்களை கொடுக்கும்.

எட்டில் சஞ்சரிக்கும் சூரியன் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் பிரச்சினைகள் தீரும். மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும்.

கும்பம்
இந்த வாரம் கிரகங்கள் எட்டாம் வீட்டில் கூட்டணி சேருவதால் போராட்டங்கள் ஏற்படும். கவனமாக விழிப்புணர்வோடு செயல்பட்டால் பிரச்சினைகளை குறைக்கலாம். தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம்.

எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்க. முதலீடு செய்யும் முன் யோசனை தேவை. ராசி அதிபதி சனி கேது சேர்க்கை பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு. தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இரவு பயணங்களை தவிர்க்கவும். உணவு விசயத்தில் கட்டுப்பாடு தேவை. பிள்ளைகளால் மகிழ்ச்சி எற்படும். எட்டாம் வீட்டில் கிரகங்கள் இருப்பதால் பணம், பொருட்களை பத்திரப்படுத்தங்கள். சுப செலவுகள் ஏற்படும். முருகனை வணங்கலாம். ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடவும் நன்மைகள் நடக்கும்.

மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு, ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் குரு, பத்தாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சூரியன் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு மாறுகிறார். ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகங்களின் பார்வை உங்க ராசி மீது விழுவது சிறப்பு. ஆறாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் எதிர்ப்புகள் கட்டுப்படும்.

கொடுத் வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். களத்திர ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும். பணத்தை அதிகமாக எதிலும் முதலீடு செய்து நஷ்டப்பட வேண்டாம்.

இந்த வாரம் புது முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். குரு பகவான் பார்வை உங்க ராசி மீது விழுவது சிறப்பு. பணவரவு தாராளமாக இருக்கும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். நெருக்கடிகள் விலகி சந்தோஷங்கள் கூடும். பத்தாம் வீட்டில் இருக்கும் சனி கேதுவினால் தடங்கல்கள் வந்து செல்லும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like