ஒருவனை புகழின் உச்சிக்கே கொண்டு சென்று பாதாளத்தில் தள்ளி விடுவது விஜய் டீவி க்கு ஒன்றும் புதிதில்லை என சமூகவலைத்தளவாசிகள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதுவும் இலங்கைத்தமிழர்கள் நாம் இது முதல் முறை என்றால்தானே கவலைப்படுவதற்கு,ஒவ்வொரு முறையும் அவர்களே நம்பிக்கையை கொடுத்து அந்த குதுகலத்தில் நாங்கள் இருக்கும் போதே அதிர்ச்சியையும் தந்து பழகிவிட்டார்கள்.
அந்த ஏமாற்றத்தில் இருக்கும்போதுநாம் கூறும் வார்த்தைகள்
இவங்களாவது இலங்கை ஆட்களை வெல்ல விட்றதாவது” “இனிமே உந்த chanell ஐ பார்க்க கூடாது” என கூறிவிட்டே அடுத்த reality show இல் எம்மவர் யாராவது வரும்போது தென்னிந்தியர்களை விட நாமே trending ஐ பலபடுத்திவிடுவோம் என்பதுதான் உண்மை.
அது போல இன்று தர்ஷனின் வெளியேற்றத்துக்கு அறம்புறமாக கத்துவோம் ,பின் திங்கள் கிழமை லொஸ்லியாவுக்காக vote பண்ணுவோம்,லொஸ்லியாவும் ஜெயிக்கவில்லை என்றால் அதற்கு ஒரு 3 நாள் விமர்சிப்போம்,விஜய் டீவியை வெறுப்போம், அதன்பின்னர் சுப்பர் சிங்கரில் எம்மவர் வரும்போது வாயை பிளந்து பாப்போம்… ஏமாற்றம் எமக்கு ஒன்றும் புதிதில்லையே!! என நெட்டிசன்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.