அக்டோபர் மாதம் முழுவதும் குரு இந்த ராசியை குறி வைத்திருக்கிறார்! சிம்ம ராசி எச்சரிக்கையாக இருக்கவும்? தன லாபம் யாருக்கு தெரியுமா?

அக்டோபர் மாதம் அற்புதமான மாதம். கன்னி ராசியிலும் துலாம் ராசியிலும் கிரகங்கள் சஞ்சரிக்கும் மாதம்.

இந்த கிரகங்கள் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் அற்புதங்களும் அதிர்ஷ்டங்களும் நடைபெறப்போகிறது.

அந்த வகையில் அக்டோபர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் என்று பாடப்போவது யார் யார் என்று பார்க்கலாம்.

மேஷம்
இந்த மாதம் வெற்றிகளும் நன்மைகளும் கிடைக்கும், பணவரவு அதிகமாகும். வேலையில் இருப்பவர்களுக்கு உற்சாகமும் வெற்றியும் கிடைக்கும். பொறுமையாக இருந்தால் நல்லது நடக்கும். நிறைய சுப செலவுகள் ஏற்படும்.

உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணம், காதல் வாழ்க்கையில் கவனம் தேவை. உடல் நலத்திலும் கவனம் தேவை. கல்வியில் உயர்வு ஏற்படும்.

உங்க ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எட்டாம் வீட்டில் குரு இருக்கிறார். நோய்கள் எட்டிப்பார்க்கும் மருத்துவ செலவுகள் மூலம் குணமாகும். அக்டோபர் 4ஆம் தேதி முதல் சுக்கிரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு நகர்கிறார்.

அக்டோபர் 2 முதல் 4 வரை சந்திராஷ்டமம் வரை உள்ளது. அக்டோபர் 29 மாலை முதல் 31 வரை சந்திராஷ்டம நாட்களாக இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.

புதிய ஒப்பந்தங்கள் வேண்டாம் சொத்துக்கள் வாங்க வேண்டாம். கவனமாக இருக்கவும். அக்டோபர் இறுதியில் நிகழ உள்ள குருப்பெயர்ச்சியால் சில அதிர்ஷ்டங்கள்

கைகூடி வரும். இந்த மாதம் செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே அக்டோபர் மாதம் உங்களுக்கு அற்புதமான மாதம்தான் காரணம் உங்க ராசிக்கு ஐந்து மற்றும் ஆறாம் வீட்டில் கிரகங்கள் கூட்டணி சேருகின்றன.

பூர்வீக சொத்துக்கள் வழியில் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் நடக்கும்.

உங்க ராசிநாதன் ஆறாம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சி பெற்று அமர்வதால் விபரீத ராஜயோக காலம் கூடி வருகிறது. கணவன் மனைவி உறவு இணக்கமாக இருக்கும்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். சுக்கிரன் புதன், குரு சேர்க்கையால் கல்வியில் மேன்மை கிடைக்கும். அஷ்டமத்து சனி கேது நேரடியாக ராகு

பார்வையால் சில குழப்பங்கள் வரலாம் கவனம் தேவை. அக்டோபர் 4 பிற்பகல் 12.19 முதல் அக்டோபர் 6 இரவு 09.36 வரை முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. மாத இறுதியில் ஏழாம் வீட்டில் கிரகங்கள் கூட்டணி சேர்ந்தாலும் குரு பகவான் இடப்பெயர்ச்சியாகி அஷ்டமத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார்.

விபரீத ராஜயோகம் வரப்போகிறது. இந்த மாதம் ராகு காலத்தில் துர்க்கையை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே. இதுநாள் வரை நான்காம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்றிருந்த புதன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்.

கூடவே சில நாட்களில் சுக்கிரனும் இணைவது சிறப்பம்சம். உயர்கல்வி யோகம் கூடி வரப்போகுது. வெளிநாட்டு கல்வி பயில எடுக்கும் முயற்சிகள் நன்மையில் முடியும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

புதிதாக எதற்கும் இந்த மாதம் ஆசைப்பட வேண்டாம். முதலீடு செய்யும் முன்பாக முன்யோசனை தேவை. சனி செவ்வாய் பார்வையால் சின்னச் சின்ன தடைகள் ஏற்படும். குருவின் நகர்வு சில மாற்றங்களை ஏற்படுத்துவார்.

அக்டோபர் 6 இரவு 09.36 முதல் அக்டோபர் 9 காலை 09.41 வரை முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த மாதம் புதன்கிழமை லட்சுமி ஹயக்ரீவரை வணங்க நன்மைகள் நடக்கும்.

கடகம்
மனோகாரகன் சந்திரனை ராசி நாதனானக் கொண்ட கடகம் ராசிக்காரங்களே. இந்த மாதம் உங்களுக்கு ராசியான மாதம். காரணம் உங்க ராசிநாதன் சஞ்சாரம்

சந்தோஷத்தைத் தரும். செய்யும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும் தைரியம் கூடம், வீடு சொத்து சேர்க்கை அமையும்.

கார் வாங்கலாம், பொன் நகைகள் வாங்கலாம். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும்.

வேலையால் நல்ல வருமானம் கிடைக்கும். படிப்பவர்களுக்கு சோம்பேறித்தனம் நீங்கி நன்மைகள் நடக்கும். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு நன்மைகள், வாய்ப்பு வரும். கல்வி,வேலையில் கவனமாக இருந்தால் கவலையில்லை.

கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க நல்லதே நடக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்க பாதிப்புகள் நீங்கும்.

அக்டோபர் 9 காலை 09.41 முதல் அக்டோபர் 11 இரவு 10.26 வரை இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. திங்கட்கிழமை சந்திரபகவானை வணங்க நன்மைகள் நடக்கும்.

சிம்மம்
சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்க ராசிநாதன் சூரியன் முதல் 15 நாட்கள் செவ்வாயோடு சேர்ந்து இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.

உங்க பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்க. பேச்சில் உஷ்ணம் வேண்டாம் அமைதியாக பேசுங்கள் இல்லாவிட்டால் உங்க ஒவ்வொரு பேச்சுக்கும் குற்றம் கண்டுபிடிப்பார்கள்.

கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க நெருக்கமானவர்கள் பிரச்சினை ஏற்படுத்துவார்கள். அரசு வேலைகள் சிலருக்கு கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் கிடைக்கும். தங்கம் வெள்ளி நகைகள் வாங்க நல்ல மாதம்.

புதிய ஆடைகள் வாங்குவீர்கள். திருமண பேச்சுவார்த்களை சிலர் தொடங்கலாம். வரன் பார்க்கத் தொடங்குங்கள். மாத இறுதியில் ஏற்படும் குரு பெயர்ச்சி குரு பார்வையால் யோகங்கள் அதிகம் கிடைக்கும்.

இளைய சகோதர சகோதரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். அக்டோபர் 11 இரவு 10.26 முதல் அக்டோபர் 14 காலை 10.20 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும்.

மவுன விரதம் இருப்பது நல்லது. தினசரி ஞாயிறன்று சூரிய நமஸ்காரம் செய்யவும் பாதிப்புகள் குறையும்.

கன்னி
புதன் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த மாதம் இருக்கிற வேலையை பத்திரமாக பார்த்துக்கங்க. பணவரவு அதிகரிக்கும். பெற்றோர்கள் மூத்தவர்களின் ஆசி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த மாதம் பொறுமை தேவை. நான்காம் வீட்டில் சனி கேது இருப்பதால் தடைகள் ஏற்படும். உங்க ராசிக்கு ஏழாம் வீட்டை சனி செவ்வாய் பார்வையிடுவதால் வேலை செய்பவர்களிடையேயும் வீட்டிலும் பிரச்சினைகளும் வரும் என்பதால் பொறுமை தேவை.

இந்த மாதம் புதிதாக வேலை எதுவும் தேடவேண்டாம். இருக்கிற வேலையை பத்திரமாக பார்த்துக்கங்க.

பேச்சில் திறமை வெளிப்படும். பணவரவும் அற்புதமாக இருக்கும். மாணவர்களுக்கு நல்ல மாதம். அக்டோபர் 14 காலை 10.20 முதல் அக்டோபர் 16 இரவு 08.46 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. உடல் ஊனமற்றவர்களுக்கு உதவுங்கள். சிவ வழிபாடு நன்மையைத் தரும்.

துலாம்
அதிர்ஷ்டங்கள் தேடி வரும் மாதம் இது. குருவினால் தன வரவு அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல்நல பாதிப்பு ஏற்படும். வேலை மாற நினைக்க வேண்டாம்.

உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிநாடு வாய்ப்பு கூடி வரும். பெண்களுக்கு நல்ல மாதம். பயணங்கள் வெற்றியை தேடி தரும். மாணவர்களுக்கு நல்ல மாதம் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

காதல் மலர்ந்தாலும் தடைகள் வரும். நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க. வருமானம் வந்தாலும் செலவுகள் அதிகம் அதிகரிக்கும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. நெருப்பு விசயங்கள், மின்சாதனங்களில் கவனம் தேவை.

உறவினர்களிடம் சரியான பேச்சுவார்த்தை அவசியம். மூன்றாம் வீட்டில் சனி கேது பிரச்சினையை ஏற்படுத்துவார். அக்டோபர் 16 இரவு 08.46 முதல் அக்டோபர் 19 காலை 5.23 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. சனிக்கிழமை பெருமாளை வணங்க நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்

உங்க ராசிக்கு இந்த மாதம் முன்னேற்றங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்பவர்களுக்கு நல்லது நடக்கும். கல்விக்காக முயற்சி செய்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும்.

குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. மாத இறுதியில் புதிய வேலை கிடைக்கும் வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகிறது. சுக்கிரனால் விபரீத ராஜயோக அமைப்பு தருகிறார். உயர்கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள்.

சுப விரையங்கள் அதிகம் நடக்கும். குடும்பத்தில் பிரிவினை வரும் காரணம் குடும்ப ஸ்தானத்தில் சனி இருப்பதால் சிலருக்கு பணப்பிரச்சினை வரும். தடைகள் தடங்கல் வந்து கொண்டே இருக்கும். சிலருக்கு உடம்பில் பிரச்சினைகள் வரும். வேலையில் சில மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடக்கும்.

வீடு வாகன வசதிகள் நடைபெறும். அக்டோபர் 19 காலை 5.23 முதல் அக்டோபர் 21 காலை 11.40 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி

வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. வியாழக்கிழமை குரு ஸ்தலங்களுக்கு சென்று வணங்க நன்மைகள் நடக்கும்.

தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்டவர்களே. உங்களுக்கு இந்த மாதம் நன்மைகள் நடைபெறும் காலம் நெருங்கி வருகிறது. இந்த மாதம் நல்ல திட்டங்கள் செயல்படுத்தத் தொடங்குவீர்கள்.

உடல்நல பிரச்சினைகள் தீரும். நிறைய முன்னேற்றங்கள் வரப்போகிறது. வாழ்க்கையே சூனியமாக இருந்தது. இனி சந்தோசமும் பசுமையும் வரப்போகிறது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் நடைபெறும்.

இந்த மாதம் திருமணம் தொடர்பான முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். தொழில் செய்யும் இடத்தில் சில தடைகள் வரலாம் கவனம் தேவை. நேர்மறையாக நினைத்தாலே போதும் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். பெண்கள் பாதுகாப்புடன் இருங்கள்.

களத்திர ஸ்தானத்தில் இருந்து ராகு பார்ப்பதால் குடும்பத்தில் சில குறைகள் இருக்கும். மாத இறுதியில் குரு பெயர்ச்சியாகி உங்க ராசிக்கு வந்த பிறகு நன்மைகள் நடக்கும். அக்டோபர் 21 காலை11.40 முதல் அக்டோபர் 23 பிற்பகல் 03.12 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில்

ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடக்கும்.

மகரம்
அக்டோபர் மாதம் உங்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது. காதல் விவகாரங்கள் தடை தாமதங்களுடன் முடிவுக்கு வரும். சனி பகவான் சிலருக்கு வேலையிழப்பு,

துன்பங்கள் நிம்மதியிழப்பை தந்து கொண்டிருக்கிறார். இனி தவறுகள் செய்யாமல் இருந்தால் தப்பித்து கொள்வீர்கள்.

உடம்புல கவனம் வையுங்கள். துன்பங்களில் இருந்து விடுதலை பெறக்கூடிய மாதம் சிலருக்கு திடீர் பதவி கிடைக்கும். காரணம் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். திடீர் பணவரவும் வரும்.

குரு பகவான் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். சுப விரையங்கள் ஏற்படும். அக்டோபர் 23 பிற்பகல் 03.12 முதல் அக்டோபர் 25 மாலை 4.23 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. பைரவர் வழிபாடு, குல தெய்வ வழிபாடு நன்மையை ஏற்படுத்தும்.

கும்பம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே மாத முற்பகுதியில் கிரகங்கள் எட்டாம் வீட்டில் இருப்பதால் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்க.

எதிரிகள் விசயத்தில் கவனம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வேகம் தேவையில்லை. கோபத்தை விடுங்க நன்மைகள் நடக்கும். சிலருக்கு உடல்வலிகள் வரும் மருத்துவரிடம் போங்க.

மாத பிற்பகுதியில் கிரகங்கள் அற்புதமாக அமைந்துள்ளது. வாய்ப்புகளும் வருமானங்களும் குவியப் போகிறது. வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் வரும். தொட்டது துலங்கும். நன்மைகள் தேடி வரும்.

கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள் லாபம் கொட்டப்போகுது. அக்டோபர் 25 மாலை 4.23 முதல் அக்டோபர் 27 மாலை 4.31வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. அமாவாசை நாட்களில் குல தெய்வ கோவிலுக்கு போய் வாருங்க நன்மைகள் நடக்கும்.

மீனம்
குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே. இந்த மாதம் தேவையில்லாத எரிச்சல் கோபம் வரும். செவ்வாய் சனி பார்வைகளால் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும்.

அதிகம் வாய் பேசாதீங்க அமைதியாக இருந்து காரியம் சாதிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் ஒருவித மந்த தன்மையை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டிற்கு நகரும் கிரகங்களால் எச்சரிக்கையும் ஜாக்கிரதையாகவும் இருக்கவும்.

நிதானத்தோடு இருந்தால் விபத்துக்கள் ஏற்படாமல் தப்பிக்கலாம். எதிரிகள் தொந்தரவு அதிகம் இருக்கும். போட்டி பொறாமைகள் அதிகம் உண்டு. தெளிவாக இருங்கள் வியாபாரிகள் பொருட்களை அதிகமாக ஸ்டாக் வாங்கி வைக்க வேண்டாம்.

மாத இறுதி வரை குரு பகவான் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து ராசியை பார்ப்பதால் சோதனைகளை சாதனைகளாக்குவார்.

குரு தன லாபத்தை கொடுப்பார். அக்டோபர் 1 முதல் அக்டோபர் 2 காலை 7.10 வரையும் அக்டோபர் 27 மாலை 4.31 முதல் அக்டோபர் 29 மாலை 05.35 வரை உள்ள

நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. வெள்ளிக்கிழமை சுக்கிரபகவானை வணங்க நல்லதே நடக்கும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like