நீங்கள் இந்த திதியில் பிறந்தவர்களா…? உங்க குணநலன் இது தானாம்..!

பஞ்சாங்கத்தில் ஒரு முக்கிய பகுதியாக இருப்பது திதி. திதி என்றால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொலைவை குறிப்பதாகும்.

சூரியனும், சந்திரனும் ஒரே தீர்க்க ரேகையில் இருக்கும் தினத்தின் அடிப்படையில் தான் அதாவது அமாவாசையை வைத்து தான் திதிகள் தோன்றுகின்றன.

அமாவாசை நாளையும், பூரணை(பௌர்ணமி) நாளையும் அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும்.

அமாவாசையை அடுத்துவரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை என்றும், பூரணையை(பௌர்ணமி) அடுத்த பிரதமையை கிருஷ்ண பட்ச பிரதமை என்றும் அழைக்கின்றனர்.

தற்போது, நாம் பிறந்த திதிகளுக்கு ஏற்ப அவரவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பிரதமை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் :
நன்றி மறவாதவர்கள்.

இரக்க குணம் கொண்டவர்கள்.

அறிவுக்கூர்மை உடையவர்கள்.

பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

பொறுமை உடையவர்கள்.

சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

கீர்த்தி உடையவர்கள்.

சுக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

அமைதியான குணநலன்கள் கொண்டவர்கள்.

எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள்.

எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருக்கக்கூடியவர்கள்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like