சனி பெயர்ச்சி பலன்கள் 2020 : ராஜபோக வாழ்க்கையை வாழ போகும் 5ஆம் எண்காரர்கள் இந்த பரிகாரத்தை உடனே செய்யவும்..?

உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியங்கள் உங்களுடைய பிறந்த எண்ணில் இருக்கிறது.

எண்களின் சில கணிதக் கணக்கீடுகள் நமது வாழ்க்கை சிக்கல்களைத் தீர்க்க உதவுவதாக நம்பப்படுகிறது.

அந்த வகையில், 5ஆம் எண்ணில் பிறந்தவர்களின் சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விலக்குவீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க நினைப்பவர்கள். தலைமைதாங்கும் பண்பை இயற்கையிலேயே உடையவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில், சனி பகவான் செழிப்போடு செல்வாக்கையும் அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள்.

ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகபபடுத்தும் ஆற்றல் உண்டாகும்.

தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெற அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளைப் பெறுவீர்கள்.

மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்படுவீர்கள். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலா சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் செயல்களை செய்து முடிப்பீர்கள்.

நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதிருங்கள். உங்கள் கருத்துகளை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.

வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

நடை, உடை, பாவனைகளில் அழகு ஏற்படும். உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உறுதுணையாக நிற்பார்கள்.

இதனால் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சிலகாலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும், எதிலும் கவனமாக இருக்கவும்.

புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே கொள்முதல் செய்து, விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

பிறருடன் பேசும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உற்சாகப்படுத்தும்.

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள்.

பரிகாரம்
பெருமாள் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
மரிக்கொழுந்தை அருகிலிருக்கும் பெருமாளுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்
“ஓம் ஸ்ரீஅச்யுதாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்
2, 5, 7.

அதிர்ஷ்ட கிழமைகள்
திங்கள்
புதன்
வெள்ளி

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More