சனியின் உக்கிர பார்வையால் இந்த மூன்று ராசிக்கும் ஆபத்து? குருவால் திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா?(இந்த வார ராசி பலன்)

இந்த வாரம் மிதுனம் ராசியில் ராகு கன்னி ராசியில் சூரியன் செவ்வாய் துலாம் ராசியில் புதன், சுக்கிரன் விருச்சிகம் ராசியில் சந்திரன், குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் சந்திரன் தனுசு, மகரம், கும்பம் ராசிகளில் சஞ்சரிகிறார். ரிஷபம், மிதுனம்,கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் உள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் சந்திராஷ்டம் ராசிகள்

  • தனுசு 04-10-2019 பகல் 12.20 மணி முதல் 06-10-2019 இரவு 09.35 மணி வரை.
  • மகரம் 06-10-2019 இரவு 09.35 மணி முதல் 09-10-2019 காலை 09.40 மணி வரை.
  • கும்பம் 09-10-2019 காலை 09.40 மணி முதல் 11-10-2019 இரவு 10.25 மணி வரை.
  • ரிஷபம் ராசிக்கு சந்திராஷ்டமம் – 04-10-2019 பகல் 12.20 மணி முதல் 06-10-2019 இரவு 09.35 மணி வரை.
  • மிதுனம் ராசிக்கு சந்திராஷ்டமம் – 06-10-2019 இரவு 09.35 மணி முதல் 09-10-2019 காலை 09.40 மணி வரை.
  • கடகம் ராசிக்கு சந்திராஷ்டமம் – 09-10-2019 காலை 09.40 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம்

மேஷம்
செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே. முதலாவது ராசியான உங்களுக்கு இந்த வாரம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய் ஏழாம் வீட்டில் புதன், சுக்கிரன், எட்டாம் வீட்டில் குரு ஒன்பதாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சுக்கிரன் புதனின் அனுக்கிரகம் அற்புதமாக உள்ளது. வியாபாரம் சிறப்பாக இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு பொருளாதார வரவு நன்றாக இருக்கும்.

குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கைகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நன்மைகள் நடக்கும்.

ஆறாம் வீட்டில் உள்ள கிரகங்கள் துணிச்சலையும் அபிவிருத்தியையும் தருவார்கள். உப ஜெய ஸ்தானத்தில் அமரும் கிரகங்கள் உதவி செய்யும். கடன்கள் அடையும் எதிர்ப்புகள் தீர இது நன்மை தரும் கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த வாரம் திருப்புமுனை ஏற்படுத்தும் வாரம்.

உங்க ராசியை புதன், சுக்கிரன் பார்ப்பதால் வெற்றிகளும் நன்மைகளும் கிடைக்கும், தனலாபத்தை தரும். வேலையில் இருப்பவர்களுக்கு உற்சாகமும் வெற்றியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.

எட்டில் குரு இருப்பதால் பண வரவு இருந்தாலும் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. கவனமாக செலவு பண்ணுங்க. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

உடலில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சினைகளை உடனே கவனிங்க. இந்த வாரம் நீங்க துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்
காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே.

இந்த வாரம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் செவ்வாய் ஆறாம் வீட்டில் சுக்கிரன் புதன், ஏழாம் வீட்டில் குரு எட்டாம் வீட்டில் குரு ஒன்பதாம் வீட்டில் சனி, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சூரியன் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் அமர்வது பரம்பரை சொத்துப்பிரச்சினைகள் வரும். விழிப்புணர்வு தேவை.

உங்க ராசி அதிபதி சுக்கிரன் புதனுடன் சேர்ந்து ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் பிரச்சினைகள் வரும்.

உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் சிந்தனை செயல்பாடுகளால் காரிய வெற்றி நடக்கும். குரு பார்வையால் முயற்சியால் தன லாபம் கிடைக்கும்.

விபரீத ராஜயோகம். நடக்கப் போகிறது. காரணம் ராசி அதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியுமான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. சனி கேது எட்டாம் வீட்டில் நிற்பதால் வேலை, திருமணத்தில் தடை தாமதங்களை தரும்.

பயணங்களின் போது கவனமாக இருங்கள். கடன் வாங்காதீங்க பிரச்சினைகள் அதிகம் வரும் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

சந்திராஷ்டமம் – 04-10-2019 பகல் 12.20 மணி முதல் 06-10-2019 இரவு 09.35 மணி வரை உள்ளதால் மவுன விரதம் இருப்பது நல்லது. ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் நடக்கும்.

மிதுனம்
புத்தி நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் புதன், ஆறாம் வீட்டில் குரு ஏழாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் இருக்கிறார். தடைகளை ஏற்படுத்துவார் என்றாலும் சுக்கிரன் வலுவாக இருப்பதால் பிரச்சினை இல்லை.

பெரிதாக எதுவும் ஆசைப்பட வேண்டாம். என்றாலும் புதன் சுக்கிரன் கூட்டணி நினைத்ததை நிறைவேற்றுவார். மாணவர்கள் சுகமான கல்வியை படிக்க உதவும். வெளிநாடு செல்லும் யோகத்தையும் புதன் தருவார்.

சனி பார்வை உங்க ராசி மீது விழுவது பாதிப்பை தரும். சனியும் கேதுவும் இணைந்து உங்களை பார்வையிடுவதால் உங்க வார்த்தையில் கவனம் தேவை.

பயணங்களில் கவனம் தேவை. விழிப்புணர்வோடு இருந்தால் பிரச்சினை வராது.

சந்திராஷ்டமம் – 06-10-2019 இரவு 09.35 மணி முதல் 09-10-2019 காலை 09.40 மணி வரை உள்ளதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. இந்த வாரம் பாதிப்புகளை சமாளிக்க காலடிபைரவரை கும்பிடுங்கள் கவலைகள் தீரும்.

கடகம்
மனோகாரகன் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன் செவ்வாய் நான்காம் வீட்டில் சுக்கிரன் புதன், ஐந்தாம் வீட்டில் குரு ஆறாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

எதையும் அமைதியாக இருந்து முயற்சி பண்ணுங்க நல்லது நடக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் சுபமாக முடியும். கல்வி வேலை வாய்ப்புகள் சுபமாக இருக்கும்.

செவ்வாயின் எட்டாம் பார்வை உங்க பத்தாம் வீட்டின் மீது விழுவதால் வேலை தொழில் உற்சாகத்தை தரும்.

வெளிநாடு செல்லும் யோகம் வெற்றியைத்தரும். குரு பார்வை கடகத்தின் மீது விழுவது கூடுதல் சிறப்பு.

கல்வி நிலை சிறப்படையும் காரணம் புதன் நான்கில் அமர்ந்துள்ளார். புதன் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் பயணங்கள் சிறப்பாக இருக்கும்.

பயணங்களில் வெற்றி கிடைக்கும். திருமணம் முயற்சிகள் சுபத்தை தரும். வேலையில் மாற்றம் செய்ய முயற்சி செய்யலாம்.

சந்திராஷ்டமம் – 09-10-2019 காலை 09.40 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பேச்சில் கவனம் தேவை யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

சிம்மம்
தந்தை காரகன் சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் செவ்வாய், மூன்றாம் வீட்டில் சுக்கிரன் புதன் நான்காம் வீட்டில் ஐந்தாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

பணவரவு அதிகம் இருக்கும். அரசு துறை வேலையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகமாகும். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.

பாக பிரிவினை தொடர்பான பேச்சுக்கள் சுபமாக முடியும், குடும்பத்தில் சகோதர, சகோதரிக்காக நீங்க செய்யும் முயற்சிகள் வெற்றியில் முடியும்.

ராசிக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்வதால் கலைத்துறையில் இருப்பவர்கள் பிரபலமடைவீர்கள்.

கிரகங்கள் வலுவாக இருந்தால் செயல்படுத்தும். தூண்டும். நான்காம் வீட்டில் உள்ள குரு உங்க தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் நன்மைகள் நடக்கும். தைரியமாக முடிவு பண்ணுங்க.

இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் சாதகமான பலனை தருவார் மேலும் நன்மைகள் நடக்க லட்சுமி ஹயக்ரீவரை வணங்கலாம்.

கன்னி
புத்தி நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசியில் சூரியன் சுக்கிரன் சஞ்சரிக்கின்றனர்.

ராசிக்கு இரண்டாம் வீட்டில் புதன் சுக்கிரன் மூன்றாம் வீட்டில் குரு, நான்காம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

ராசிக்குள் நெருப்பு கிரகங்கள் சஞ்சரிப்பதால் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் உங்கள் உடல் நலத்தில் அக்கறை தேவை சிலருக்கு சிறிய கொப்புளங்கள் வரும். சகோதரர் உடல் நலத்திலும் அக்கறை தேவை.

சிறுதூர பயணங்களால் நன்மை ஏற்படும். புதன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் இருக்கிற வேலையை பத்திரமாக பார்த்துக்கங்க.

பணவரவு அதிகரிக்கும். பெற்றோர்கள் மூத்தவர்களின் ஆசி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க மகிழ்ச்சி பிறக்கும்.

வாக்கு ஸ்தானத்தில் புதன் சுக்கிரன் இணைவதால் படிப்பில் நல்ல நிலையில் இருக்கும் புத்தியும் அறிவும் நன்றாக வேலை செய்யும். நான்காம் வீட்டில் சனி கேது சில பிரச்சினைகளை கொடுத்தாலும் படிப்பில் பிரச்சினை வராது.

குரு புதனின் நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சில நன்மைகளை தருவார். உங்க புத்தியை தூண்டி லட்சிய வெறியை ஏற்படுத்துவார்.

மாணவர்கள் கல்வி நலம் சிறப்பாக இருக்கும். செவ்வாய்கிழமைகளில் அம்மனுக்கு அரளிப்பூ மாலை போட்டு வணங்குங்கள் நன்மைகள் நடக்கும்.

துலாம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன், ராசிக்குள் புதன், சுக்கிரன், இரண்டாம் வீட்டில் குரு, மூன்றாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் பாதகாதிபதி சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் இருப்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. விரைய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து உள்ளதால் இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. காரணம் இந்த நேரத்தில் உடல் நல பாதிப்புகளை தருவார்.

நெருப்பு விசயங்கள், மின்சாதனங்களில் கவனம் தேவை. உறவினர்களிடம் சரியான பேச்சுவார்த்தை அவசியம்.

உங்க ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று புதனோடு சேருவது யோகத்தை கொடுக்கும். காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

வாக்கு ஸ்தானத்தில் குரு இருக்கிறார். வருமானம் அதிகம் வந்தாலும் அதிகம் கடனை கொடுப்பார். செவ்வாய் சனி பார்வை இருப்பதால் வேலை மாற நினைக்க வேண்டாம்.

ராசியில் புதன் சுக்கிரன் இணைவதால் படிப்பில் சிறப்பாக இருக்கும். பாதிப்புகள் குறைய அனுமன் சாலீசா படிக்கவும். அனுமனுக்கு சனிக்கிழமை வெற்றிலைமாலை போடவும் நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்
செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ஜென்ம ராசியில் குரு இரண்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

செவ்வாய் சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் புதிய வேலை கிடைக்கும். 12ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பதால் விபரீத ராஜயோக அமைப்பை தருகிறார்.

உயர்கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். காரணம் புதன் 12ஆம் வீட்டில் இருக்கிறார். சுப விரையங்கள் அதிகம் நடக்கும்.

காரணம் விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். வேலையில் சில மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடக்கும்.

வீடு வாகன வசதிகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும் முக்கிய முடிவுகள் வேண்டாம். சனி மற்றும் கேது இரண்டாம் வீட்டில் இருப்பதால் தேவையில்லாமல் பேசாதீங்க.

குடும்பத்தில் பிரிவினை வரும் காரணம் குடும்ப ஸ்தானத்தில் சனி. பணப்பிரச்சினை வரும். தடைகள் தடைகள் வந்து கொண்டே இருக்கும். உடம்பில் பிரச்சினைகள் வரும். பாதிப்புகள் குறைய விநாயகரை வணங்க நன்மைகள் நடக்கும்.

தனுசு
குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் செவ்வாய், லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் குரு ஜென்ம ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

புதன் சுக்கிரன் உங்க லாப ஸ்தானத்தில் இணைந்திருக்கும் காலத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும். நல்ல திட்டங்கள் செயல்படுத்தத் தொடங்குவீர்கள்.

உடல்நல பிரச்சினைகள் தீரும். நீண்ட நாள் கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் பற்றுக்கொள்ளுங்கள்.

பாதுகாப்பாக எச்சரிக்கையாக இருங்க. வேலைக்கு போறவங்க அலுவலகத்தில் ஜாக்கிரதையாக இருங்க. உங்க ராசியில் உள்ள சனி கேதுவினால் வேலையில் பிரச்சினைகள் ஏற்படும் கவனம் தேவை. செய்யும் தொழிலில் கவலைகள் இருக்கும்.

பாதிப்புகள் குறைந்து சந்தோஷங்கள் அதிகரிக்க திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வணங்குங்கள் நன்மைகள் நடக்கும்.

மகரம்
சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு ஒன்பதாம் சூரியன் செவ்வாய் பத்தாம் வீட்டில் சுக்கிரன், புதன், லாப ஸ்தானத்தில் குரு, விரைய ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

திருமணம் கைகூடும், வேலை கிடைக்கும், காதல் விவகாரங்கள் கை கூடும் என்றாலும் எல்லாமே தடை தாமதங்களுடன் நடைபெறும். காரணம் ஏழரை சனியின் பிடியில் இருக்கிறீர்கள். சனிபகவான் உங்களை சோதனை செய்து வருகிறார்.

உடம்புல கவனம் வையுங்கள். சிலருக்கு திடீர் பதவி கிடைக்கும். சனியால் எற்படும் பாதிப்பை தடுக்க தியானம் பண்ணுங்க. வருமானம் இருந்தாலும் வேலை வசதிகள் இருந்தாலும் மன உளைச்சலோடு இருப்பீங்க.

தேவையான வசதி வீடு வண்டி வாகனம் இருந்தாலும் கடன் அதிகம் இருக்கும். காரணம் ஏழரை சனிதான். இந்த வாரம் நீங்கள் புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு போய் வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.

கும்பம்
சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன் செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் புதன், பத்தாம் வீட்டில் குரு லாப ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமும் விழிப்புணர்வும் தேவை. வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் வரும். தொட்டது துலங்கும்.

நன்மைகள் தேடி வரும். கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள் லாபம் கொட்டப்போகுது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் பாதுகாப்பு தேவை. சிலருக்கு உடல்வலிகள் வரும் மருத்துவரிடம் போங்க.

கோபத்தை விடுங்க நன்மைகள் நடக்கும். உங்க வேலையில் கவனமாக இருங்க உயர் அதிகாரிகளிடம் சர்வ ஜாக்கிரதையாக இருங்க.

சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும். இந்த வாரம் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மன குழப்பங்கள் தீரும். மேலும் நன்மைகள் நடக்க வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் அதிகம் நடக்கும்.

மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன் செவ்வாய் இணைந்துள்ளன.

எட்டாம் வீட்டில் சுக்கிரன் புதன் சஞ்சரிக்கின்றனர். ஒன்பதாம் வீட்டில் குரு , பத்தாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

குடும்பத்தில் உள்ளவர்கள் மீது தேவையில்லாத எரிச்சல் கோபம் வரும். செவ்வாய் சனி பார்வைகள் சங்கடங்களை ஏற்படுத்தும்.

கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க விட்டுக்கொடுத்து போங்க. வாக்கில் நிதானம் தேவை. பேச்சில் கவனம் தேவை இல்லாவிட்டால் பிரச்சினைகள் அதிகமாகும். உடம்பில் ஒரு சோம்பேறித்தனம் இருந்து கொண்டே இருக்கும்.

பயணங்களில் எச்சரிக்கை தேவை. குரு பார்வையால் பணவரவு அதிகமாகும். புதிய வேலை கிடைக்கும். சனியால் சிலருக்கு வேலை மாற்றம் கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைத்து வருமானம் கிடைக்கும். மிகச்சிறப்பான வாரமாக அமைய வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்மனை விளக்கேற்றி வழிபடுங்க நன்மைகள் நடக்கும்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like