சனிப்பெயர்ச்சி பலன் 2020 : உங்கள் பிறந்த திகதி ஆறா? விபரீத ராஜயோகத்தில் வாழ்க்கையே திசை மாறிப் போகும்!

உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியங்கள் உங்களுடைய பிறந்த எண்ணில் இருக்கிறது.

அந்த வகையில், முன்வைத்த காலை பின்வைக்காமல் வெற்றி நடைபோடும் ஆறாம் எண் அன்பர்களே உங்களின் சனிப்பெயர்ச்சி பலன்களை பாருங்கள்.

நீங்கள் யாரையாவது நம்பிவிட்டால் வாரி வழங்குவீர்கள்.

எடுத்த முடிவிலிருந்து சிறிதும் இறங்கி வரமாட்டீர்கள். எந்த சிரமங்களையும் சமாளித்து வெற்றிக்கனியை பறிப்பீர்கள். கொஞ்சம் கர்வம் உடையவர்கள் நீங்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில், இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் தேடிவரும்.

சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்துகொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும்.

மனஅழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட்டு புதிய மனிதராக ஆவீர்கள்.

ஆன்மிகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். சில நாட்களாக இழுபறியாக இருந்த உங்கள் சகோதர வழியில் சில அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசவேண்டும்.

உங்களைப் பற்றிப் புறம்பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிட மிருந்து நாசூக்காக விலகுவதே நல்லது. கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். குறுக்குவழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம்.

எந்த வேலையை எடுத்தாலும் உறுதியான எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் நன்றாகவே முன்னேறுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் சிக்கும் சங்கடம் ஏற்படலாம்.

அரசாங்கம் வாயிலாக சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். மனவலிமை அதிகரிக்கும். செயல்களில் சுறுசுறுப்பு கூடும்.

உங்களை நீங்களே அறிந்து கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படுவீர்கள். தெய்வ வழிபாட்டிற்குத் தக்க பலன் கிடைக்கும். காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பதே சிறந்தது. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. ஆனாலும் சக ஊழியர்கள் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் காலதாமதம் ஏற்படலாம். உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம்.

ஆனால், இவற்றை மீறி சனி கெளரவமான பதவிகளை வழங்குவார். இதனால் உங்களுக்கு உறுதுணையாக இருந்துவந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும்.

உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம். வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும்.

கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்களால் சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேசவேண்டாம்.

மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பணவரவும் நன்றாகவே இருக்கும்.

பரிகாரம்
அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

சிறப்பு பரிகாரம்
சர்க்கரைப் பொங்கல் செய்து வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு ஆலயத்தில் விநியோகம் செய்யவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்
“ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மையை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 7 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்
2, 5, 6, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்
திங்கள்
செவ்வாய்
வியாழன்
வெள்ளி.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like