அஷ்டலட்சுமி இன்று எந்த ராசியினருக்கு அள்ளிக்கொடுக்கப்போகிறார் தெரியுமா?.. இவங்களுக்கு தான்..!

மேஷம்
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாலினத்தவர்களால் உங்களுக்கு ஆதரவான சூழல்க்ள உருவாகும். பயணங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சுப செய்திகள் வந்து சேரும். அதனால் குதூகலம் அதிகரிக்கும். குழந்தைகள் பற்றிய வீண் கவலைகள் தீரும். தொழிலில் பங்குதாரர்களின் உதவியினால் தொழிலில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். அதனால் தொழில் அபிவிருத்தியும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும். தொழிலை உங்களுடைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்வீர்கள். உங்களுடைய கோபத்தை விடுத்து கொஞ்சம் அமைதியுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களுடைய ஆதரவினால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். புதிய சிந்தனைகள் மனதுக்குள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
புதிய தொழில் தொடங்குவது சம்பந்தமான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தலைமைப் பதவியில் இருக்கின்றவர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. வாகனப் பயிற்சியை மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் நிதானம் தேவை. உங்களுடைய உடைமைகளில் கொஞ்சம் கவனம் வேண்டும். புத்திக் கூர்மையில் கொஞ்சம் மந்தத் தன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவினால் உங்களுடைய லாபங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள பிள்ளைகள் வீட்டின் சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
இன்று மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கால்நடைகளின் மூலம் உங்களுடைய லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான விவகாரங்களில் கொஞ்சம் நிதானம் வேண்டும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த சில மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

துலாம்
வேலையிடத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்க ஆரம்பிக்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையில்லாத வீண் கவலைகள் தோன்றும். அடுத்தவர்களுக்கு உதவி சய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் இருந்து வந்த கால தாமதங்கள் நீங்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வீட்டில் மனைவியின் ஆதரவினால் சில முக்கிய செயல்களைச் செய்து முடிப்பீர்கள். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். தேவையில்லாத அலைச்சலும் வீண் செலவுகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம்அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய உத்தியுாகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். முக்கிய முடிவுகளை வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து மேற்கொள்வது நல்லது. கல்வியில் கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். வெளியூர் பயணங்களில் இருந்து வந்த தடைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்
மற்றவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எந்த செயல் செய்தாலும் அதில் கொஞசம் கூடுதல் கவனமாக இருத்தல் நலம். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேற கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். வாகனப் பராமரிப்பு செலவு செய்ய வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இனறு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
வியாபாரம் சம்பந்தப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். அதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பணி நிமித்தமாக முக்கிய பொறுப்பாளர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொது சேவை செய்கின்றவர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். நண்பர்களின் மூலமாக கொஞ்சம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்
மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் தீர்ந்து போகும். மற்றவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாதத் திறமையினால் அனைவரையும் கவரும் திறன் உண்டு. உயர் அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like