7ம் எண்ணில் பிறந்தவர்களின் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 : சனியால் அடிக்க போகும் ஜாக்பாட் உங்க ராசிக்குதான்

வெள்ளை மனம் கொண்டு எளிதில் யாரையும் எதிலும் நம்பிவிடும் பழக்கம் உடைய ஏழாம் எண் அன்பர்களே, அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் கடைபிடியுங்கள்.

உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருப்பார். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.

ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். அதேநேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும்.

வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டால் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறிக்கோள்களை எட்டும். ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள்.

புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துகளில் திடீரென்று பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை தாமாகவே தீரும்.

தீயவர்கள் உங்களை விட்டு எளிதாக விலகிவிடும் அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதரர்களுடனான உறவில் சில சலசலப்பு ஏற்படும். ஆனாலும், விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு சமாளிப்பீர்கள்.

சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள். தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். புகழும், கௌரவமும் உயரும்.

இதுநாள்வரை தேவையற்ற வீண்பழி சுமந்த சில அன்பர்கள் அவற்றிலிருந்து விடுபடுவார்கள். முயற்சிகள் பலமடங்காக உயர்ந்து, வெற்றி கிடைக்கும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலைதூக்கலாம்.

கவனத்துடன் தவிர்க்கவும். பேச்சாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். உங்கள் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடிவரும்.

வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்தி, நேர்வழியில் செல்லவும், பல பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சகஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள்.

மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள்.

வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் தேடிவரும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்கள் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சககலைஞர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும்.

ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள்.

பரிகாரம்
குலதெய்வத்தை தினமும் வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

காக்கைக்கு தினமும் சாதம் வைத்து வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்

“ஓம் ஸ்ரீமஹாகணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்
2, 6, 7, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்
திங்கள்
செவ்வாய்
வியாழன்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More