8ம் எண்ணை குறி வைத்திருக்கும் சனி! புகழின் உச்சிகே சென்று விடுவீர்கள்… 2020 சனிப் பெயர்ச்சி பலன்கள்

எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் எட்டாம் எண் அன்பர்களே, நீங்கள் தோல்வியைக் கண்டு துவளாதவர்.

போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண விரும்புபவர். மற்றவர்களுக்கு உதவி செய்து பட்டம் பதவி பெறுவீர்கள். திறமைகள் பல கொண்டவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில், பலவிதமான குழப்பங்கள் இருந்தும் திட சிந்தனைகளுடன் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல வழிகள் உதயமாகும்.

நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகலாம். எப்போதும்போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நண்பர் களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டும்.

உடலிலிருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள்.

பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள். பெற்றோர் வழியில் நிலவிவந்த மனக்கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும். பிரபலம் ஆவீர்கள்.

நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதேசமயம் பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்படலாம், இதனால் சிலநேரங்களில் மனம் நொந்து போவீர்கள். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள், உங்களிடம் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், தனித்தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள்.

தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதைரியம் குறையும். இச்சமயங்களில் சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அலுவலகம் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு ஏற்படாது. தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள். வியாபாரிகளுக்கு கடும் முயற்சிகளுக்கு பின் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும்.

தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன்சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள்.

அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்கள் முயற்சிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும்.

ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்கவைத்துக் கொள்வீர்கள்.

கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும்.

ஆன்மிகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும்.

ஆனால், பெற்றோர் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள்.

பரிகாரம்
துர்க்கை அம்மனை வியாழக்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்
“ஓம் ஸ்ரீம்துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்
1, 3, 7, 9

அதிர்ஷ்ட கிழமைகள்
ஞாயிறு, செவ்வாய், வியாழன்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More