வெளியில் வந்த பின் லொஸ்லியாவின் முதல் பதிவு- என்ன தெரியுமா?

பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த லொஸ்லியா முதல்முறையாக இன்ஸ்ட்ராகிராமில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இறுதி போட்டிக்கு 4 பேர் தேர்வாகியிருந்தனர்.

இந் நிலையில் மலேசியாவின் முகின் ராவ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லொஸ்லியாவும் பிடித்தனர்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்போது சகபோட்டியாளர்களுடன் நேரம் செலவிடுவது, அவர்களின் வீடுகளுக்கு செல்வது என பிஸியாக உள்ளனர்.

அந்தவகையில் சாண்டி வீட்டில் முகின், கவின், தர்ஷன், அபிராமிக்கு விருந்து, வனிதா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட லொஸ்லியா, சேரன் வீட்டுக்கு சென்ற ஷெரின், சாக்ஷி என அனைவரும் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில் லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து இன்ஸ்ட்ராகிராமில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், ‘அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நன்றி என்பது சின்ன வார்த்தை என்று எனக்கு தெரியும். உங்கள் அன்பு எனக்கு வியப்பை தருகிறது. நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இல்லாததற்கும், கேள்விகளுக்குப் பதிலளிக்காததற்கும் மன்னிக்கவும். உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்துவேன். லவ் யூ சோ மச்’ என லொஸ்லியா பதிவிட்டுள்ளார்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like