டைட்டில் வின்னர் முகினிற்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பளித்த மலேசிய மக்கள்- வைரல் வீடியோ

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் தனது நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு மலேசிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இதில் இறுதி போட்டிக்கு 4 பேர் தேர்வான நிலையில் முகின் ராவ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்தடுத்த இடங்களை முறையே சாண்டியும், லொஸ்லியாவும் பிடித்தனர்.

மலேசியாவை சேர்ந்த முகின் பாடல் பாடுவது, கலைநயமிக்க பொருட்கள் செய்வது என ஆரம்பத்தில் உற்சாகமாகக் காணப்பட்டபோதும், சிறுவயது அனுபவத்தை பகிந்துகொண்ட முகின் சிறுவயதிலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார்.

இடையில் அபிராமியின் அன்பை பெற்ற முகின் அதனால் சில சங்கடங்களுக்கும் முகம் கொடுத்தார்.

இருப்பினும் சக போட்டியாளர்களின் உந்துதலால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்ற முகின், பினாலே போட்டியில் கடுமையாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இதேவேளை டிக்கெட் டு பினாலே மூலம் இறுதி போட்டிக்கு சென்றவர்கள் இறுதி போட்டியில் வெற்றிபெற மாட்டார்கள் என்ற நிலை கடந்த சீசன்களிலும் இருந்தபோதும், அதை உடைத்து முகின் பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் ஆனார்.

இந்நிலையில் முகின் மீண்டும் மலேசியாவிற்கு திரும்பிய நிலையில் அவருக்கு மலேசிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like