கவினை கைவிட்டு இலங்கை பறந்த லொஸ்லியா

பிக்பாஸ் இல்லக்காதலன் கவினை விட்டு லாஸ்லியா இலங்கை திரும்பிய பின்னர் இருவரது ரசிகர்களும் இயக்குநர் சேரனை அசிங்க அசிங்கமாகத் சபித்துக்கொண்டு வருகிறார்கள்.

இவர்கள் தொல்லை தாங்கமுடியாமல் அடுத்தடுத்து ட்விட்கள் போட்டு,’இனி அவங்க ரெண்டு பேர் பெயரைக்கூட உச்சரிக்கமாட்டேன்’என சேரன் கதறுகிறார் .

பிக்பாஸ் கொண்டாட்டங்கள் முடிந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, முகேன், தர்ஷன், ஆகியோர் ஏற்கனவே கிளம்பியிருக்க நேற்று லொஸ்லியாவும் இலங்கைக்கு புறப்பட்டு வந்துவிட்டார்.

அவர் கவினைக் கரம் பிடித்து இலங்கைக்கு அழைத்துச் செல்வார் என காத்திரருந்த ரசிகர்கள் , இப்படி நடந்ததை நினைத்து ஏமாந்தார்களோ என்னவோ, இதற்கு காரணமானவர் என எண்ணி சேரனை கவின் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் அந்த ஏச்சுக்கள் அதிகமாகவே அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக தொடர்ந்து ட்விட்டுகள் போட ஆரம்பித்தார் சேரன்.

இது தொடர்பான அவருடைய கடைசி மூன்று பதிவுகளில்,

கவின் லாஸ்லியா ரசிகப்பெருமக்களுக்கு..

உங்களுக்கு பிடித்தவர்களை BBவீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புன்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை.நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன். அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.

கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது.

என் ப்ரச்னைக்கு வரவேண்டாம்…நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்..

இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More