ஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்! இனி தினமும் சாப்பிடுங்கள்

பலாப்பழம் பற்றி தெரியாதவர்கள் என்று இந்த உலகத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு இது எல்லாருக்கும் விருப்பமான ஒன்றாகும். இந்த பலாப்பழம் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. எனவே தான் வெப்ப மண்டல நாடுகளான பங்களாதேஷ் இதன் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.

சாப்பிடுவதற்கு தித்திக்கும் சுவையை கொண்ட இந்த பழத்தின் விதைகளை சமையலில் கூட பயன்படுத்துகின்றனர்.

முப்பெரும் கனிகளில் ஒன்றாக இருக்கும் இப்பழம் சீசன் பழமும் கூட. கோடை காலத்தில் மட்டுமே உற்பத்தியாகிறது.

இதில் எண்ணற்ற ஆரோக்கியமான பொருட்களும் அடங்கியுள்ளது இதன் மிகச் சிறப்பு. இதில் சபோனின், லிக்னன்ஸ், பைப்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் ஜஸோப்ளோவோன்ஸ் போன்ற புற்றுநோயை எதிர்க்கும் பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. இந்த பொருட்கள் புற்று நோய்க்கு எதிராக செயல்பட்டு புற்று நோய் செல்களை அழிக்கிறது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த பொருட்கள் கருப்பை புற்று நோய் செல்களை தடுக்கிறது. இதன் சபோனின் என்ற பொருள் புற்று நோய் செல்லின் சுவர்களை அழித்து புற்று நோய் அதிதீவரமாக வளராமல் தடுக்கிறது.

மேலும் பலாப்பழம் குடல், நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோய் போன்றவை ஏற்படாமல் காக்கிறது.

பலாப்பழத்தின் ஏனைய நன்மைகள்
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல்
சாதாரணமாக பார்த்தால் இதிலுள்ள சர்க்கரையால் இதை டயாபெட்டீஸ் நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் அதே நேரத்தில் இதிலுள்ள மாங்கனீஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான சருமம்
இந்த பலாப்பழம் நமக்கு ஆரோக்கியமான அழகான பொலிவு நிறைந்த சருமத்தை கொடுக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதாகுவதற்கு எதிராக செயல்படுகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள், பொலிவின்மை போன்றவற்றை போக்கி ஆரோக்கியமான சருமத்தை தருகிறது.

சரும சுருக்கங்களை போக்க இந்த பலாப்பழத்தை குளிர்ந்த பாலில் ஊற வைத்து பேஸ்ட் மாதிரி அரைத்து தினமும் முகத்தில் தடவி ஒரு 6 வாரத்திற்கு செய்யும் போது சுருக்கங்கள் மறைந்துவிடும்.

மேலும் இதிலுள்ள நார்ச்சத்துகள் நமக்கு ஏற்படும் மலச்சிக்கலையும் களைகிறது.

பொலிவான சருமம் கிடைக்க இந்த பழத்தின் விதைகளை தேனில் ஊற வைத்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இந்த முறையை தினமும் செய்யும் போது நல்ல மாற்றத்தை காணலாம்.

அழகான கூந்தல் பெறுவதற்கு

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க தேவையான போஷாக்கு மற்றும் மயிர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அழகான கூந்தல் வளர்ச்சியை கொடுக்கிறது.

தினமும் சில துண்டு பலாப்பழம் சாப்பிடும் போது கிடைக்கும் விட்டமின் ஏ மூலம் உங்கள் உடைந்த முடிகள், வறண்ட கூந்தல் போன்றவற்றையும் சரி செய்யலாம். ஒரே மாதத்தில் சிறந்த மாற்றத்தினை உங்கள் முடியில் காணலாம்.

ஆற்றல் தருதல்
இதிலுள்ள புரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இது கொழுப்பு இல்லாத கலோரி அதிகமான கார்போஹைட்ரேட் உணவாக இருப்பதால் உடலுக்கு மிகவும் சிறந்தது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்
பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் செல்களின் எலக்ரோலைட் பொருட்களான சோடியத்தின் அளவை சமம்படுத்துகிறது. இதனால் உடலின் இரத்த அழுத்தம் சீராக மாறி இதய நோய்கள் மற்றும் இரத்த குழாய் பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் இதுள்ள விட்டமின் பி6 இரத்தத்தில் உள்ள ஹோமோசயிதேனை குறைத்து ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கிறது.

கண்பார்வை அதிகரித்தல்
பலாப்பழத்தில் உள்ள விட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இவை கண்புரை, மாக்குலார் டிஜெனரேசன் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை வராமல் தடுக்கிறது. எனவே இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியமான கண் பார்வையை பெறலாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like