ராஜயோகத்தை அள்ளி கொடுக்க போகும் செவ்வாய் பெயர்ச்சி…எந்த ராசிக்காரர்கள் பணமழையில் நனையப்போகின்றார்கள்?

செவ்வாய் பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பாதிப்புகள் யாருக்கு என்பதைப் பார்ப்போம்.

மேஷம்
உங்க ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.

அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள்,ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் இது ருசக ராஜயோகம்.

திருமணம் நடைபெறுவதில் இருந்த தடங்கள் நீங்கும். காரணம் மங்களகாரகன் செவ்வாய் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. அவரது எட்டாம் பார்வை உங்க குடும்ப ஸ்தானத்தின் மீதும் விழுகிறது.

உங்க தொழில் ஸ்தானத்தின் மீது செவ்வாயின் பார்வை விழுவதால் புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும்.

பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உங்களின் அப்பாவின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.

உஷ்ண கிரகம் செவ்வாய் கூடவே சூரியன் வேறு கேட்கவா வேண்டும் வார்த்தைகளில் அனல் பறக்கும் வீட்டில் மனைவியிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

கொஞ்சம் நேரம் சரியில்லை வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் சண்டை வரலாம். பேச்சில் அமைதியை கடைபிடியுங்கள். வயிற்று உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம். உடல் நலனில் அக்கறை தேவை. மகிழ்ச்சியில் குறைவு இருக்கும்.

மன அழுத்தம் அதிகரிக்கலாம். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்
ஆறாம் வீடு எதிரி ஸ்தானம், அந்த வீட்டில் சனியோ செவ்வாயோ அமர்வது அற்புதமான அமைப்பு. ரிஷபம் சுக்கிரனின் வீடு.

உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இதுவும் சுக்கிரனின் வீடு எனவே நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.

குடும்ப வாழ்க்கையில் அமைதியாக இருக்கும். காதலில் வெல்வீர்கள் பாஸ். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று பலவீனமடையும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும்.

கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். எதிரிகளை அடையாளம் கண்டு ஓட ஓட விரட்டுவீர்கள். மாணவர்களுக்கு இது அற்புதமான பெயர்ச்சி போட்டி தேர்வுகளில் வெல்வீர்கள்.

வீட்டிற்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை ஆறாம் இடம் நோய் ஸ்தானம் என்பதால் உங்க உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நல்லதல்ல. செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், லாப ஸ்தானம், ஆயுள் ஸ்தானத்தின் மீது விழுகிறது.

வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் எதிர்ப்புகள் வலுக்கும்.

ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம்.

மனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். குறுகிய கால முதலீடுகள் வேண்டும். நீண்ட கால முதலீடுகள் லாபத்தை தரலாம். அமைதியா இருங்க. பொறுமையாக எதையும் கையாளுங்க.

சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் அற்புதமாக இருக்கும்.

கடகம்
கடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் உயர்வு காணப்படும்.

மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். நான்காம் வீடு தாய் ஸ்தானம் இது சுக ஸ்தானம் கூட. அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

எதிர் பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு.

குடும்பத்தில் உறவினர்களால் மன அமைதிக்கு பங்கம் வரலாம். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யலாம். வீடு மனை வாங்கலாம் லாபம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்மம் ராசிக்கு 3வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இது முயற்சி ஸ்தானம். உங்க தைரியம் தன்னம்பிக்கை கூடும்.

பொருளாதாரம் மேம்படும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரலாம். உரசல்களை தவிர்த்து விடுங்கள். வேலை விசயமாக சிறு பயணம் செல்வீர்கள்.

பயணங்களினால் நன்மைகள் நடக்கும். உங்க உடல் நலம் மேம்படும். நோய்கள் பிரச்சினை தீரும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் நுழைந்துள்ளார். இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம். வாக்கில் உஷ்ண கிரகம் இருப்பதால் நாக்கில் கவனம். கோபமாக சுள்ளென்று பேச வேண்டாம்.

மனைவியுடன் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. பிசினஸில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம் வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது.

கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சவாலான சூழ்நிலை ஏற்படும். கடினமான பணிகளை செய்ய வேண்டியிருக்கும்.

வியாபார பேச்சுவார்த்தை சுமாராகவே இருக்கும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் உணவில் கவனம் தேவை.

துலாம்
செவ்வாய் உங்கள் ராசியில் நுழைந்திருக்கிறார். ராசியில் ஏற்கனவே உஷ்ண கிரகம் இருப்கிறார் கூடவே செவ்வாய் இணைவதால் கோபம் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம். மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள்.

அதேசமயம் யாருடனவாவது சண்டை மூள வாய்ப்புள்ளது. கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமர்வான் எனவே சண்டை போடாதீங்க கோபத்தை தவிர்த்து விடுங்கள். எனக்கு ஏன் இப்படி என்ற மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை.

மனைவியுடன் சண்டை வரும் கவனம் ப்ளீஸ். உடல் நலத்தில் அக்கறை தேவை. சுறுசுறுப்பா வேலை பாருங்க. இல்லாட்டி சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த இடப்பெயர்ச்சி காலத்தில் முருகப்பெருமானை செவ்வாய்கிழமைகளில் வணங்குங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே… உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12வது வீட்டில் அமர்ந்துள்ளார். 12 ஆம் இடம் செலவு, விரைய ஸ்தானம், மோட்சம், தூக்கம் ஆகியவைகளை குறிக்கும் இடம். பிசினஸ் செய்பவர்களுக்கு திடீர் செலவுகள் வரலாம்.

வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக போங்க இல்லாட்டி விபத்தின் மூலம் மருத்துவ செலவுகளும் வரும்.

திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை வரலாம். மனைவியுடன் வாக்குவாதத்திற்கு வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கூடும்.

அல்சர் போன்ற உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெடும். பண விசயத்தில் முக்கிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். கவனமாக இல்லாவிட்டால் உடல் நல பாதிப்பும் ஏற்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே இனி உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய். நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம்.

கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் தீரலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான்.

பணவரவு அதிகரிக்கும். முன்னோர்கள் சொத்துக்களை விற்பனை செய்வதில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு நன்மைகள் நடைபெறும் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும்.

செவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்க நன்மைகள் நடைபெறும்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும்.

பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். பிரச்சினைகளை விட்டு தள்ளியே நில்லுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிலபிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. அரசு பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு நன்மைகள் நடைபெறும் காலம். உறவினர்களிடம் உற்சாகமாக இருப்பீர்கள்.

அம்மா வழி உறவினர்கள் அன்புடன் இருப்பார்கள். வீடு வாசல் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் மாற்றம் ஏற்படலாம்.

பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் இருக்காது என்றாலும் நிநி நிலைமை நிலையாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். காதல் திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். உங்க கருத்தை உங்க வாழ்க்கை துணை புரிந்து கொள்வார். வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். திருமணமான தம்பதிகள் சந்தோஷமாக இருப்பீர்கள்.

செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமான வணங்க நன்மைகள் நடைபெறும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வணங்கலாம்.

மீனம்
மீனம் ராசிக்கு 2 மற்றுட் 9 ம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். செவ்வாய் பார்வை குடும்ப ஸ்தானம், தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும்.

தைரியம் கூடும். எதிலும் திருப்தி இருக்காது. கடுமையாக உழைக்க நேரிடும். ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள்.

எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள். விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ஏற்கனவே சூரியன் வேறு அங்கே சஞ்சரிக்கிறார். கூடவே செவ்வாய் இணைவதால் சிறு சிறு விபத்துகள் ஏற்படும்.

காரமான உணவுகள் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம் வயிறு பிரச்சினைகள் வந்து விடும் கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More