இன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2019

பஞ்சாங்கம்

நாள் வியாழக்கிழமை
திதி துவிதியை இரவு 7.59 வரை பிறகு திரிதியை
நட்சத்திரம் கேட்டை காலை 9.46 வரை பிறகு மூலம்
யோகம் சித்தயோகம்
ராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை
எமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை
நல்லநேரம் காலை 10.45 முதல் 11.45 வரை
சந்திராஷ்டமம் பரணி காலை 9.46 வரை பிறகு கிருத்திகை
சூலம் தெற்கு
பரிகாரம் தைலம்

 

மேஷராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். கணவன் – மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் செலவுகள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் ஏற்படும்.

ரிஷபராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

மிதுனராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு சகோதர வகையில் எதிர் பாராத ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவி னர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக் கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர் களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

கடகராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியை காலையில் தொடங்குவது நல்லது.

சிம்மராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த கருத்துவேறுபாடு நீங்கும். முக்கியமான விஷயம் தொடர்பாக வாழ்க்கைத்துணையின் ஆலோசனை கேட்பீர்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். அலுவ லகத்தில் எதிர்பார்த்த சலுகை இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டு விலகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.

கன்னிராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் தேவையறிந்து பண உதவி செய்வார். சிலருக்கு உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் தேவையை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி வரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

துலாராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சியைத் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். கொடுத்த கடனில் ஒரு பகுதி திரும்பக் கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவு ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

விருச்சிகராசி அன்பர்களே!

செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். வீட்டில் தேடியும் கிடைக்காத முக்கிய ஆவணம் ஒன்று இன்று கிடைக்கக் கூடும். பணியிடத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசுராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை விட்டுப்பிடித்துச் செல் வது நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பக்குவமான அணுகுமுறை நல்லது.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் கிடைக்கும். தந்தையின் விருப்பத் தைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் மூலம் பணவரவு கிடைக்கும். அலுவலகத்தில் மிகவும் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகை யில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

மீனராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். பயணத்தின்போது கொண்டு செல்லும் பொருள்களை கவன மாகப் பார்த்துக்கொள்ளவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மனதில் தேவை யற்ற குழப்பம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். பொறுமை அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.