இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் வசீகரத்தின் ராஜா? இந்த நெருப்பு ராசிக்கு இப்படி ஒரு காந்த சக்தியா? இதுல உங்க ராசி எது?

ஒரு சிலரை பார்த்ததுமே பலருக்கு பிடித்து விடும். அதற்கு காரணம் அனைவரையும் அவர்களின் இயற்கையான திறமைகள் என்று கூட கூறலாம்ஃ

அனைவரையும் கவர்பவர்கள் எப்பொழுதும் நல்லவர்களாக மட்டும்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

எனவே தனக்கு இயற்கையாக கிடைத்த வரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். சில ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை ஈர்க்கும் காந்த சக்தி இயற்கையாகவே இருக்கும்.

அப்படிபட்ட ராசிக்காரர்களை பற்றி இன்று அறிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்
காந்த சக்தியில் முதல் இடத்தில் இருப்பது சிம்ம ராசிக்காரர்கள்தான். வசீகரத்தின் ராஜா என்றால் அது அவர்கள் இவர்கள்தான். குழந்தைப் பருவம் முதலே இவர்கள் அனைவரையும் கவர்பவர்களாக இருப்பார்கள். குடும்பத்தினர் முதல் நண்பர்கள் வரை அனைவருக்கும் பிடித்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்களின் சர்வாதிகாரம் கூட பிறருக்கு வெறுப்பை ஏற்படுத்தாது. நடிப்பு துறையில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் பெரும்பாலும் வெற்றிகரமானவர்களாக இருப்பார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களிடம் இருக்கும் திறமை மற்றவர்களை அவர்களுக்கே தெரியாமல் தனுசு ராசிக்காரர்களை நோக்கி ஈர்க்கும். இந்த ராசியின் கீழ் பிறந்தவர்களின் மனதில் விசித்திரமான புதிய உலகங்கள் எப்போதும் உருவாகிக் கொண்டே இருக்கும், இவர்கள் தங்களின் ஆழமான எண்ணங்களை கேட்க விரும்பும் அனைவரிடமும் தயங்காமல் பகிர்ந்து கொள்வார்கள். தனுசு ராசிக்காரர்கள் மந்திரசக்தி மூலம் அனைவரையும் கவர்வார்கள்.

மீனம்
மீன ராசிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அரவணைப்பும், நல்ல விருப்பங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எவ்வளவு அன்பையும், கவனத்தையும் பெற விரும்புகிறார்களோ அதேபோல அன்பை விரும்புகிறவர்களும் இவர்களைத்தான் தேடிவருவார்கள். மீன ராசிக்காரர்களின் வசீகரம் அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு அர்ப்பணிப்பையும், விசுவாசத்தையும் காட்ட ஊக்குவிக்கும். இப்படிப்பட்டவர்களின் வசீகரத்தில் இருந்து யார்தான் விடுபட விரும்புவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வசீகரத்தின் அடையாளமாகும். மற்றவர்களை சமநிலையில் வைத்திருப்பதன் மூலமும், தங்களால் முடிந்த வகையில் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலமும் இவர்கள் அனைவர்க்கும் பிடித்தவர்களாக மாறுவார்கள். இவர்களின் அமைதியான நடத்தை அனைவரையும் இவர்களின் பின்னால் வரவைக்கும், இவர்கள் யாருக்கும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள். தங்களின் திறமை மற்றும் அனுபவம் மூலம் தன்னை சுற்றியிருப்பவர்களின் பிரச்சினைகளை தன்னால் முடிந்தவரை இவர்கள் தீர்த்து வைப்பார்கள். நேர்மையை விரும்பும் அனைவரும் இவர்களின் பின்னால் வருவார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரார்களை உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்களின் வசீகரத்தை உங்களால் நிராகரிக்க முடியாது. ஏனெனில் இவர்களின் வெறுப்பேற்றும் காரியங்கள் கூட மற்றவர்களுக்கு இவர்களின் மீது கோபத்தை ஏற்படுத்தாது. இவர்களை மன்னிப்பதற்கான வாய்ப்பைத்தான் அனைவரையும் தேடுவார்கள், அதற்கு காரணம் இவர்களின் வசீகரம் ஆகும். ஆர்வமானவர்களாகவும், புத்திசாலியாகவும் இருக்கும் இவர்களுக்கு மற்றவர்களை தங்களை நோக்கி ஈர்ப்பது என்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்காது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like