தனியாக இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் தவறாமல் செய்ய வேண்டியது இது தான்…..!!

உலகில் பெரும்பாலானோர் மாரடைப்பால் தான் இறக்கின்றனர். இதற்கு நமது ஆரோக்கியமற்ற மற்றும் மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். அதிலும், கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் மக்கள் அதிகம் உட்கொண்டு வருவதால் தான் ஏராளமானோர் மாரடைப்பால் உயிரை இழக்கின்றனர்.

ஒருவருக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். யாராலும் எப்போது மாரடைப்பு வரும் என்று சரியாக கணிக்க முடியாது. மேலும் மாரடைப்பினால் உயிரை இழப்பதற்கு, அந்நேரத்தில் உதவிக்கு யாரும் இல்லாததும் ஓர் காரணம்.
எனவே, ஒருவர் தனிமையில் இருக்கும் போது மாரடைப்பு வந்தால் ஒரு செயலை செய்வதன் மூலம் உயிரிழப்பில் இருந்து தப்பிக்கலாம்.சில ஆய்வுகளின் படி தனியாக இருக்கும் போது, உதவிக்கு யாரும் இல்லாமல் மாரடைப்பு வந்து 80% மக்கள் உயிரை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.மாரடைப்பு ஏற்பட்டால், நெஞ்சில் கடுமையான வலியை உணர்வதோடு, அந்த வலி அப்படியே கை மற்றும் தாடை வரை பரவும்.

பொதுவாக மாரடைப்பு வந்தால், ஒருவர் நினைவை இழக்கும் முன் 15 நொடிகள் தங்களுக்கு தாங்களே உதவ முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நேரங்களில் மாரடைப்பு வலியானது மெதுவாக ஆரம்பித்து, நீண்ட நேரத்திற்கு பின் கடுமையான வலியை உண்டாக்கும்.

ஆகவே லேசாக வலியை உணரும் போதே யாரையேனும் அழைத்து அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தப்பித்துக் கொள்ளலாம். இருப்பினும் அப்படி செய்வது என்பது சற்று ஆபத்து தான். ஆகவே ஒரு வழியைப் பின்பற்றினால் நிச்சயம் உயிரை பாதுகாக்கலாம்.

மாரடைப்பின் அறிகுறியை உணரும் போது ஆழமாக மூச்சை உள்ளிழுத்து இரும வேண்டும். இப்படி 2 நொடிகளுக்கு ஒருமுறை செய்து வந்தால் இதயத்தின் செயல்பாடு சீராக்கப்படும்.ஆழமாக மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் கொண்டு வரப்படும் மற்றும் இருமும் போது இதயம் இறுக்கமடைந்து உடல் இயக்கம் சீராகி, இரத்த ஓட்டமும் சீராக்கப்படும். மேலும், இச்செயலால் இரத்த அழுத்தமும் சாதாரண 

நிலைக்கு வரும்.
மாரடைப்பு வரும் அறிகுறி தெரியும் போது, ஆழமான இருமலை மேற்கொண்டவாறு, மற்றொரு பக்கம் உதவிக்கு யாரையேனும் அழையுங்கள். இது ஒரு முதலுதவி செயலே தவிர, முற்றிலும் குணப்படுத்த விடாது.

இந்த முறை அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாவிட்டாலும், நிறைய மக்கள் இந்த முறையைப் பின்பற்றியதால், சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்து, உயிரிழப்பில் இருந்து தப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.