சர்க்கரை, இதய நோய்களின் அபாயத்தை குறைக்கணுமா? இந்த டயட் போதுமே!!!

சுவீடன், டென்மார்க், பின்லாந்து, நோர்வே போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் முறை ”நோர்டிக் டயட்”.

உலக சுகாதார நிறுவனம் கருத்துப் படி நோர்டிக் டயட் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

இதில் ஏராளமான நன்மை பயக்கும் கூறுகள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இதய நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவாக இது கருதப்படுகிறது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தாவர அடிப்படையிலான உணவுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிவப்பு இறைச்சிக்கு இங்கே இடமில்லை.

மத்திய தரைக்கடல் டயட்க்கும் நோர்டிக் டயட்டுக்கும் முக்கிய வித்தியாசம் என்னவென்றால் மத்திய டயட்டில் பருப்பு வகைகளும் , நோர்டிக் உணவில் மீன் போன்றவைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மற்ற உணவுகளுடன் ஒப்பிடும் போது நோர்டிக் உணவில் சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்புகள் மட்டுமே உள்ளன.

இந்த உணவில் கம்பு, பார்லி, ஓட்ஸ், பெர்ரி மற்றும் பிற பழங்கள் போன்ற முழு தானியங்கள் உள்ளன. மேலும் இந்த உணவில் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளும் உள்ளன.

சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, ஹில்சா மீன் மற்றும் பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் பட்டாணி ஆகியவைகளும் அடங்கும்.

இந்த வகை டயட் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைப்பதாக அதன் தரத்தை WHO நிறுவனம் பாராட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like