மகர ராசியை ஆட்டிப்படைக்க போகும் ஜென்மசனி… அள்ளி கொடுக்கும் குரு…! ஏழரை சனியால் யாருக்கு 2020 இல் ராஜயோகம் தெரியுமா?

தை மாதம் கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால் நாளைய தினம் சனிபகவான் கும்பத்திற்கு இடம்மாறுகிறார்.

19ஆம் தேதி மீனம் ராசிக்கு சுக்கிரன் இடம் மாறுகிறார். தை 24ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசிக்கு இடம் மாறி அங்கு சஞ்சரிக்கும் குரு, கேது உடன் கூட்டணி சேருகிறார்.

தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை பொறுத்து துலாம், விருச்சகம், தனுசு,மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய 6 ராசிக்கும் பல மாற்றங்கள் இடம் பெற போகின்றது. அவற்றை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

துலாம்
துலாமிற்கு இதுநாள் வரை மூன்றாம் வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்திருந்த சனி பகவான் இனி நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனியாக அமரப்போகிறார்.

இந்த சஞ்சாரம் உங்களுக்கு சங்கடத்தை தரப்போவதில்லை மாறாக நிறைய சந்தோஷத்தைத்தான் தருவார்.

காரணம் சனிபகவான் உங்க ராசியில் உச்சமடைபவர். சனிபகவான் உங்க ராசிக்கு நான்கு மற்றும் ஐந்தாம் வீட்டு அதிபதி. நான்கிற்கு அதிபதி நான்காம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான அம்சம்தான். அர்த்தாஷ்டம சனி ஆட்சி பெற்றிருப்பதால் முதலில் கெடுதல் செய்வது போல தோற்றமளித்தாலும் உங்களுக்கு நன்மைகளையே செய்வார்.

விருச்சகம்
ஏழரை சனியால் அவதிப்பட்டு வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி அற்புதமான காலம் ஆரம்பமாகப்போகிறது.

இன்று முதல் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனியின் பார்வை உங்களுக்கு சாதகமான இடங்களின் மீது விழுகிறது. பணவரவு அற்புதமாக இருக்கும்.

விலகிப்போன சொந்தங்கள் எல்லாம் நெருங்கி வருவார்கள். விருச்சிக ராசிக்காரர்களே சனியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற சந்தோஷத்தை இனி உற்சாகமாக கொண்டாடுங்கள்

தனுசு
இதுவரை விரைய சனி, ஜென்ம சனி என ஏழரை சனி காலத்தில் ஐந்து ஆண்டு காலத்தை கடந்து விட்டீர்கள். உங்க ராசியில் ராசி நாதன் குரு இப்போது ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.

ஜென்மசனியும் இனி பாதசனியாக இரண்டரை ஆண்டுகாலம் மகரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தை நல்லா கவனிங்க. வேலை பிசியில் குடும்பத்தை கவனிக்காவிட்டால் நீங்க பல சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

உங்க கால்களை கவனமாக பாருங்க காரணம் பாதசனி கால்களில்தான் குறி வைக்கும். சனியால் சங்கடங்கள் வந்தாலும் 2020ஆம் ஆண்டில் சந்தோஷமான தருணங்களை குருபகவான் அள்ளி கொடுப்பார் கவலை வேண்டாம்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டமான ஜென்மசனி ஆரம்பமாகிறது. இனி இரண்டரை ஆண்டு காலம் சோதனைகள் வரலாம். சங்கடங்கள் வந்தாலும் அதை சாதனைகளாக மாற்றுவீர்கள்.

ஏழரை சனி காலத்தில் பேராசை பெரு நஷ்டம் என்பதை நீங்க மனசுல வச்சிக்கணும். ஜென்ம சனி என்று பயப்பட தேவையில்லை எதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

கும்பம்
விரைய சனியாக சனிபகவான் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது உங்களுக்கு ஏழரை சனியின் தொடக்க காலமாகும்.

உங்க ராசி நாதன் சனிபகவான் ஏழரை சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் சந்தோஷமாக மாற்றுங்கள். நேர்மையாகவும் நல்ல எண்ணத்தோடும் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 2020ஆம் ஆண்டினை சந்தோஷமாக கடந்து விடலாம்.

மீனம்
மீனம் ராசிக்கு இதுவரை சனிபகவான் தொழில் சனியாக சஞ்சரித்தவர் இனி லாப சனியாக சஞ்சரிக்கப்போகிறார்.

நீங்க செய்யும் தொழிலில் வருமானம் கொட்டப்போகிறது. நீங்க தொட்டது எல்லாம் பொன்னாகப்போகிறது. எத்தனையோ சோதனைகளையும் சங்கடங்களையும் கடந்து வந்த நீங்கள் இனி சாதனைகளையும் சந்தோஷங்களையும் மட்டுமே பார்க்கப்போகிறீர்கள். குருவும் உங்களுடைய தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்க குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like