சனியின் ஆதிக்கத்தில் பிறந்த 8ம் எண்காரர்களே!… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்

சனியின் அம்சத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு கலவையான பலன்களை கொண்ட ஆண்டாக அமையும்.

பல அனுபவங்களையும் பக்குவங்களையும் பெறுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.

உங்கள் எண்ணின் நாயகன் தற்போது உச்ச பலத்துடன் இருப்பதால் எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். கொடுக்கல், வாங்கலில் நின்று போன தொகை வசூலாகும்.

ஒரு சொத்தை விற்று வேறு சொத்து வாங்கும் யோகம் உள்ளது. மனைவி உடல் நலனில் கவனம் தேவை.சிறிய உடல் உபாதைகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.

பெண்களுக்கு பிறந்த வீட்டில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். தாயார் மூலம் ஆதரவும் ஆதாயமும் வந்து சேரும்.

நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற விசேஷங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். சொந்த பந்தங்கள் கை கொடுத்து உதவுவார்கள்.

வேலை சம்பந்தமாக எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது.

வழக்கு சம்பந்தமான தடைகள் நீங்கி சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.திசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு சொந்த வீட்டில் பால் காய்ச்சும் யோகம் உள்ளது.

தடைபட்ட பிரார்த்தனைகள், நேர்த்தி கடன்கள் இனிதே நிறைவேறும். உயர்பதவியில் இருக்கும் நண்பரின் உதவி கிடைக்கும். பிரிட்ஜ், ஏ.சி. போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். சக ஊழியர்களுடன் அனுசரணையாக போவது நலம் தரும். தள்ளிப்போன பதவி உயர்வு ஏப்ரல் மாதம் வர வாய்ப்பு உள்ளது.

வியாபாரம் கை கொடுக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகள் நீங்கும். புதிய முயற்சிகள் பலன் தரும். வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ‘ஓம் சிவ சிவ ஓம்‘ என தினமும் சொல்லி வரலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடலாம். பாரம் சுமப்போர், துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவலாம்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like