உருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க! மரணம் கூட நிகழலாம்! எச்சரிக்கை…

பல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உருளைக்கிழங்கு.

இத்தகைய உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது. உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது.

ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

உலகம் பயணிக்கும் வேகத்தில் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் பல உணவுகளில் இருக்கும் தீமைகளை பற்றி அறிந்து கொள்வதில்லை. உருளைக்கிழங்கிலும் தீமைகள் உள்ளது.

உருளைக்கிழங்கின் தோலிலோ அல்லது உள்பக்கத்திலோ பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிடக்கூடாது.

சூரிய ஒளிபடும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் பச்சைநிறத் திட்டுகள் உண்டாகின்றன.

கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) இருப்பதால், இது தீங்கான ஒன்றே. இதை சாப்பிடும் பட்சத்தில் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும்.

நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயரியா போன்றவை ஏற்படும்.

முதலில் பலவீனமாக இருக்கும். கோமா நிலையை அடைந்து அரிதாக சிலருக்கு மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டு. கருவுற்ற தாய்மார்கள் கண்டிப்பாக இவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.