செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே!… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்

செவ்வாய் அம்சம் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு பல ஏற்றங்களையும் மாற்றங்களையும் யோக அம்சங்களையும் தரப்போகிறது.

நிறைய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பெரிய மனிதர்கள் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். ஒரு சொத்தை விற்று வேறொரு சொத்தை வாங்குவீர்கள்.

வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கு ஏற்ப நல்ல உத்யோகம் அமையும். மகளிடம் இருந்து தாய்மை சம்பந்தமாக இனிக்கும் செய்தி வரும். சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணமடைவார்கள்.

மே மாதத்துக்கு பிறகு இடமாற்றத்துக்கு வாய்ப்பு உள்ளது. வீடு, கடை, அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். சகோதர உறவுகளால் அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மாணவ, மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் சேர அதிக முயற்சி தேவைப்படும். நெருங்கிய உறவுகளின் விசேஷம் காரணமாக பரிசுகள், மொய் பணம் என்று செலவுகள் கூடும்.

அக்கம் பக்கத்தினர் தோழிகளிடம் பெண்கள் சூழ்நிலை அறிந்து நடப்பது நல்லது.

வழக்கு சம்பந்தமான சமாதான முயற்சிகள் பலன் தரும். கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

வெளிமாநிலத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.

பெண்கள் சேமிப்பு, நகைச்சீட்டு பணம் மூலம் விரும்பிய வெள்ளி, தங்க ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். உத்யோகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணப்பொறுப்புகளை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

அலுவலக வேலையாக கடல் கடந்து செல்ல நேரிட வியாபாரம் சீராக இருக்கும். பணப்பிரச்னைகள் நீங்கும்.

வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள்.

பரிகாரம்: தினசரி கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்கலாம். காகம், நாய், பசு, யானை ஆகியவற்றுக்கு உணவு வழங்கலாம்

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like