சிம்ம ராசியின் 2020-ன் சனிப்பெயர்ச்சி பலன்கள்… இனி உங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தான்..!

இது நாள் வரை எப்படிப்பட்ட பிரச்சனைகளை நீங்கள் சந்தித்திருந்தாலும், அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் இந்த சனிப் பெயர்ச்சியில் நீங்க போகிறது.

இந்த சனிப்பெயர்ச்சயானது சிம்மராசிக்காரர்களான உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரப்போகிறது. அடுத்து வரப்போகும் இரண்டரை வருடங்களுக்கு நீங்கள் வெற்றியின் உச்சத்தை தொட போகிறீர்கள்.

இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் இருந்த சனிபகவான், 6ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாக போகிறார். ஆறாம் இடத்தில் உள்ள சனி பகவான் அள்ளிக் கொடுப்பார். ஆனால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.

வாகனம் ஓட்டும் போது சற்று கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல செய்தி உண்டு.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் மறைந்து அன்யூன்யம் ஏற்படும். உங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணவரவிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அமோகம் தான்.

குழந்தைகளுக்கு சளி மற்றும் கிருமி தொற்றினால் பாதிக்க அதிகவாய்ப்புள்ளது. சுகாதார வாழ்வியல் முறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்திக்கொள்ளலாம்.

வயதில் மூத்த சிம்ம ராசி அன்பர்கள் நிம்மதியான தூக்கம் வராமல் தவிப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதின் மூலம் நிம்மதியான தூக்கத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.

வேலை
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த சனிப்பெயர்ச்சி நல்ல வேலையை கொடுக்கப் போகிறது. அதுவும் நீங்கள் விரும்பிய வேலையே உங்களுக்கு அமையும். வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே மேல் அதிகாரிகளுக்கு உங்களிடம் நல்ல நம்பிக்கை ஏற்படும்.

உங்கள் மேலதிகாரியிடம் நல்ல பாராட்டையும் வாங்குவீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான சம்பளம் தான் உங்களுக்கு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.

நீங்கள் பேசும் வார்த்தைக்கு உங்கள் உடன் பணிபுரிபவர்கள் மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். உங்களது பேச்சு திறமை, அடுத்தவர்கள் மதிக்கும் அளவிற்கு மிகவும் சிறப்பாக உயரும். உங்களுக்கு கிடைக்கப்போகும் வளர்ச்சியும், நல்ல பெயரையும், பதவியையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உங்களின் அறிவுத் திறமையையும், ஆற்றலையும் கொஞ்சம் முன்னேற்றி கொள்வது நன்மை தரும்.

மாணவர்கள்
நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வு எழுதி மதிப்பெண்களை பார்க்கும்போது இது நம்முடைய மதிப்பெண் தானா என்று உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அந்த அளவிற்கு நல்ல மதிப்பெண் பெற போகிறீர்கள்.

உங்களின் மன விருப்பம் போல என்ன படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பு உடனே கிடைத்துவிடும். இந்த நல்ல நேரத்தினை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்களது வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லக்கூடிய காலம் இது. திருமணம் திருமண பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள்
உங்களது வியாபாரம் முன்னேற்றம் அடையப்போகிறது. வியாபாரத்தில் வரும் வருமானத்தை உங்களால் கணக்கிட்டுகூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பரபரப்பாக இருக்கப் போகிறீர்கள். புதியதாக தொழில் தொடங்கினாலும் கூட உடனடியாக லாபத்தை அடையலாம்.

ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வரலாம். திங்கட்கிழமைகளில் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மை தரும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like