உக்கிரமா இருக்கும் ஏழரை சனி கூரையை பிச்சிகிட்டு அதிர்ஷ்டத்தை அள்ளி தர வேண்டுமா? உடனே இந்த பரிகாரத்தினை செய்யவும்

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இன்று முதல் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபகவான் இடப்பெயர்ச்சி டிசம்பர் 27ஆம் திகதி தான் அறிவிக்கப்பட்டிருந்தாலும் சனிபகவான் செய்யும் மாயங்கள் இப்போது முதலே 12 ராசிக்காரர்களுக்கும் செயல்பட ஆரம்பித்திருக்கும்.

அவரின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க அவருக்கு பிடித்த விடயங்களை செய்யவும்.

சனிபகவானுக்கு பிடித்த தானியம் எள். அந்த எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை மனதார வேண்டினால் நன்மையே நடக்கும். ஈஸ்வரப்பட்டம் பெற்றவர் சனீஸ்வரன். அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன்.

எனவேதான் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வருபவர், நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை சேர்ப்பவர், தீர்க்காயுள் உள்ளவர்.

ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்றிருந்தால் அவர் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் மேலும் தொழில் துறை சார்ந்த சங்கங்களில் தலைமை பொறுப்புகளில் வருபவராகவும் ஆவார், கோயில் ஆன்மீக திருப்பணிகளில் செல்வாக்கு பெற்றவர், நீதிமானாக திகழ்வார், கர்ம வீரராக திகழ்வார், தன் இலட்சியத்தை நோக்கி பொறுமையாக நகர்ந்து வெற்றி அடைவார்.

சனியின் நிறம் கருப்பு

  • சனிபகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு என்று எல்லோருக்கும் தெரியும்.
  • கருப்பு நிற துணியை வைத்து வழிபடுவதை சனிபகவான் மிகவும் விரும்புவார்.
  • சனிக்கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம்.
  • சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷத்தை குறைக்கும்.
  • சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும்.
  • உளுந்து தானியத்தை தானம் செய்யலாம்.

நல்லெண்ணெய் தீபம்
சனி தசை, சனி புத்தி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, கண்டச்சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்குப் போய் விளக்கு போடுங்க.

காகத்திற்கு தயிர் கலந்த எள் சாதம் வையுங்க. காகம் சனியின் வாகனம், நம் முன்னோர்கள் காகங்கள் வடிவத்தில் நம்மை பார்க்க வருகின்றனர் எனவே முன்னோர்கள் வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார்.

சனிக்கு பிடிக்காத விசயங்கள்
தாமிரம் சூரிய பகவானுக்கு உகந்தது. சனிபகவானுக்கு உகந்தது இரும்பு பாத்திரம். எனவே தாமிர பாத்திரங்களை யாருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டாம். இது சனிபகவானின் கோபத்தை அதிகரிக்க கூடிய ஒன்றாகும்.

இதனால் தானம் கொடுப்பவருக்கும் அதை வாங்குபவருக்கும் நஷ்டம் மற்றும் உடல்நிலை கோளாறு ஏற்படலாம். அதே போல கத்தரிக்கோலை கொடுக்காதீங்க அதுவும் சிக்கலாகி விடும்.

சிவப்பு துணி கொடுக்க வேண்டாம்
சனிக்கிழமை அன்று யாருக்காவது நீங்கள் சிவப்பு நிற துணியை தானமாகக் கொடுக்க வேண்டாம் ஏனெனில் அது உங்களுக்கு சமூகத்தில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தக்கூடும்.

சனிக்கிழைமைகளில் வெள்ளை துணியை பரிசளிப்பது உங்களுக்கு திருமணம் தொடர்பான பல பிரச்சினைகளை உண்டாக்கும். கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்படும்.

சனியை சாந்தப்படுத்துங்கள்
நீதி நேர்மை இல்லாதவர்கள், சுத்தம் இல்லாத வீடுகள், அழுக்கான ஆடை அணிபவர்கள், பிறன்மனை நோக்கும் ஆண்கள், அடுத்தவர்கள் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் வஞ்சக எண்ணம் கொண்டவர்களைக் கண்டாலே சனிபகவானுக்குப் பிடிக்காது. சனியை சாந்தப்படுத்தும் வகையில் வணங்குங்கள் நல்லதே நடக்கும்.