2020 சனிப்பெயர்ச்சியில் இந்த இரு ராசிக்கும் ஏழரை சனி! சனிக்கிழமை இதை சொன்னால் ராஜயோகம் கிடைக்கும்….

சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நீடிக்கிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும், மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் தொடர்கிறது.

சனிபகவான் சரியில்லாத இடத்தில் சஞ்சரிக்கும் போது சில பரிகாரங்களை செய்தால் போதும் பலன்தரும் பரிகாரங்களும் இருக்கின்றன.

கருப்பு உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் தசரத மகாராஜா கூறிய ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்து நமஸ்காரம் செய்பவர்களை நான் துன்பப்படுத்தமாட்டேன் என்று சனிபகவானே கூறியுள்ளார்.

சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபார்கள்.

இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியது மாகும்.

இது போன்ற புனிதமான ஸ்தோத்திரம் பூலோகத்தில் வேறு எதுவும் கிடையாது. சனிபகவானே போற்றி போற்றி போற்றி.

நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம நமோ
நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச நமோ
விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே நம
புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம நமோ
தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே நமேஸ்த
கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே நமோ
கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே
சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச அதோத்ருஷ்டே,
நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே நமோ மந்த கதே,
துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய நமோ
நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்…

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like