நெருப்பு ராசியில் பிறந்தவர்கள் இந்த ராசியை திருமணம் செய்தால் பேரதிர்ஷ்டசாலியாம்! யார் கழுவுற மீனில் நழுவுற மீன் தெரியுமா?… உஷார்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

காதல் என்ற வைரஸ் தாக்கினால் அது ஆளை விழுங்காமல் விடாது. சில காதல் ஜெயிக்கும் சில காதல் காவிய காதலாகி விடும்.

காதலாகி கசிந்து உருகி திருமணத்தில் முடித்து திருமணத்திற்கு பின்னரும் காதலிப்பவர்கள் ஒரு சிலர்தான். காதல் வைரஸ் எந்த ராசிக்காரர்களை எளிதில் தாக்கும்.

யாருக்கு காதல் கல்யாணத்தில் முடியும் என்று பார்க்கலாம். காதலில் ஜெயிப்பதற்கும் ஒரு ராசி வேண்டும்.

மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என பார்க்கலாம்.

மேஷம்

நெருப்பு ராசியான மேஷத்தில் பிறந்த நீங்கள் படு ஸ்பீடு பார்ட்டி நீங்கள். முதல்நாளே பார்த்து அடுத்த நாளே ஐ லவ் யூ சொல்லி அடுத்த நாள் மணமுடித்து ஹனிமூன் போக ஆசைப்படுவீர்கள். உங்க வேகத்தைப் பார்த்து எதிராளி மிரண்டு போய்விடுவார்.

எல்லா விசயத்திலும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்து விட்டு வருத்தப்படுவீர்கள்.

உங்க ராசி அதிபதி செவ்வாய் என்பதால் காதலோடு காமமும் அதிகமாகவே இருக்கும். காதலில் ஈகோதான் உங்களுக்கு எதிரி. அதை சரி செய்து விட்டால் உங்க காதல் ஜெயிக்கும். நீங்க நெருப்பு ராசிக்காரர் என்பதால் நெருப்பு ராசியில் பிறந்த சிம்மம், தனுசு ராசிக்காரங்களுக்கு காதல் அதிகமாகவே வரும்.

ரிஷபம்

சுக்கிரனை ஆதிக்க நாயகனாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் இதயம் முரளி டைப். காதலிக்க அதிகம் மெனக்கெடுவீர்கள். இந்த ராசியை சேர்ந்த பலபேர் காதலைச் சொல்லி சக்சஸ் ஆன பின்னால் ரொம்ப சின்சியராக காதலிப்பீர்கள். கையில காசில்லேன்னாலும் கடன் வாங்கியாவது காதலிக்கு செலவு செய்வீங்க. கன்னி, மகர ராசிக்காரங்க உங்களை அதிகம் லவ் பண்ணுவாங்க.

மிதுனம்

பேசி பேசியே எதிராளியை மயக்குற பார்ட்டி நீங்கதாங்க. அழகான சிரிப்பால் அனைவரையும் மயக்குவீர்கள். பாக்கெட்டில் இருந்து பைசா பெயராது. நீங்கள். எந்த ஒரு விஷயத்தையும் உஷாராக அணுகும் உஷார் பார்ட்டி நீங்கள். பிரச்சினையை முன்கூட்டியே மோப்பம் பிடித்து உடனே எஸ்கேப் ஆகிவிடுவீர்கள். துலாம், கும்பம் ராசிக்காரர்கள் நெருக்கமாவார்கள்.

கடகம்

உங்களுக்கு கற்பனை சக்தி உங்ககிட்டே அதிகம் இருப்பதாலே கவிதை, கதை எழுதி காதல் நாயகனாக திகழ்வீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து பார்ட் பார்ட்டா பிரிச்சு பேசுறதிலேயே பாதிப்பேர் உங்ககிட்டே விழுந்திடுவாங்க.

அந்த அளவுக்கு பேச்சுத்திறமை கொண்டவங்க நீங்க. கனவுலகத்தில் சஞ்சரிக்கிறதுன்னா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். மனோ காரகன் சந்திரனை நாயகனாக கொண்ட நீங்க அம்மா பிள்ளை என்பதால் அவங்க சம்மதத்தோடுதான் திருமணம் செய்வீர்கள். விருச்சிகம், மீன ராசிக்காரங்கள் உங்கள் அதிகம் விரும்புவார்கள்.

சிம்மம்

நீங்க சொல்றதை கேட்கிற ஆளைத்தான் நீங்க ஓகே செய்வீர்கள். கொஞ்சம் கூச்ச சுபாவம் இருக்கும். காதலுக்காக ஓட மாட்டீர்கள். காதல் உங்களை தேடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.கொள்கையா? காதலா என்று கேட்டால் உங்கள் சாய்ஸ் கொள்கைதான். உங்களுக்கு ஒத்துவரக்கூடிய ராசி மேஷம், தனுசு.

கன்னி

கவர்ச்சியான முகவெட்டும் , உடலமைப்பும்,கலகலப்பான பேச்சும் கொண்டவர் நீங்கதாங்க. கேலியும் கிண்டலும் பேசி பேசியே அனைவரையும் உங்கள் பக்கம் நீங்க திருப்பி விடுவீர்கள். காரியம் பெருசா வீரியம் பெருசா என்கிற பழமொழிக்கேற்ப கவுரவத்தைப்பற்றி துளியும் கவலைப்படாமல் காரியத்தில் கண்ணாக இருப்பீங்க. காதலித்தவரையே கரம் பிடிப்பீர்கள். ரிஷபம், மகரம் ராசிக்காரர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள்.

துலாம்

காற்று ராசியில் பிறந்தவங்க நீங்க. காதல் உங்களுக்கு சுவாசம் மாதிரி. சுக்கிரன் உங்க ராசி அதிபதி என்பதால் காமம் அதிகமாகவே இருக்கும். உண்மையான காதலுக்கு நீங்கள் மதிப்புக் கொடுப்பீங்க. எச்சரிக்கை என்பது உங்கள் ரத்தத்தில் இயல்பாய் கலந்த ஒன்று.

நீங்க காதலிக்கிறவங்கள் உங்களை புகழ்ந்து பேசவேண்டும் என எதிர்பார்ப்பீங்க. உங்களை வர்ணிப்பதை ரொம்பவே ரசிப்பீங்க. நீங்க காதலிக்கிற ஆள் கார், பங்களாவோட இருக்கணும்னு எதிர்பார்ப்பீங்க. கும்பம், மிதுன ராசிக்காரங்க உங்களை காதலிப்பாங்க.

விருச்சிகம்

நீங்க நல்ல திறமைசாலி நீர் ராசிக்காரங்களான உங்களுக்கு செவ்வாய் அதிபதி என்பதால் அந்த எண்ணங்கள் அதிகமாகவே இருக்கும். காதலியிடம் அன்பான பேச்சை விட காதல், காம பேச்சுக்களே தூக்கலாக இருக்கும். கோபத்தையும் கொட்டுவீங்க.

தேள் மாதிரி பழிவாங்கிற குணம் உங்க ரத்தத்தில் கலந்த ஒன்று. ஈகோவும், மதிப்பு கொடுக்காத மட்டமான பேச்சும் காதல் பிரிய காரணமாகிவிடும். கடகம் மற்றும் மீன ராசிக்காரங்க உங்களை காதலிப்பாங்க.

தனுசு

நெருப்பு ராசிக்காரங்க நீங்க. காதலியிடம் நேர்மையாகவும், நாகரீகமாகவும் நடந்துக்குவீங்க. உங்களுக்கென உயரிய நோக்கம் இருக்கும். அதை அடைய காதல் ஒரு தடையாக இருக்கக்கூடாதுன்னு நினைப்பீங்க. கடவுளை அதிகம் நம்புவதால், காதல் கல்யாணத்தில் முடிய ஆண்டனை வேண்டி செல்வீங்க. நீங்க உடுத்தும் உடை ஆடம்பரமாக இல்லைன்னாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்கும்.

எப்பொழுதும் உங்கள் நெற்றியில் விபூதியோ, குங்குமமோ, சந்தனமோ இல்லாமல் வெளியே கிளம்பமாட்டீங்க. காதல் தோல்வியடைந்தாலும் பெரிதாக வருத்தப்பட மாட்டீங்க. மேஷம், சிம்ம ராசிக்காரர்கள் அதிகமாக உங்களை நேசிப்பார்கள்.

மகரம்

காதலுக்காகவே பிறந்தவங்க நீங்கதாங்க. காசு இல்லாம கூட இருந்துருவீங்க காதல் இல்லாம இருக்க மாட்டீங்க. எதையும் மனசுவிட்டு பேசமாட்டிங்க. காதலை கமுக்கமாக வச்சிருப்பீங்க.உங்களை உங்க காதலியோ காதலனோ ரொம்ப நேசிப்பாங்க.

உங்க கவுரவத்துக்கும் எந்த பங்கமும் வந்துவிடக்கூடாதுன்னு நினைப்பீங்க. காதலிக்கு செலவு செய்வதில்கூட கஞ்சத்தனம் காட்டுவீங்க. ரிஷபம், கன்னி ராசிக்காரங்க உங்களைத்தேடி தேடி காதலிப்பாங்க.

கும்பம்

காதல் உங்களுக்கு பிடித்தமான விசயம். கொஞ்சம் சோம்பேறித்தனம் இருப்பதாலே காதலியை சந்திக்க சரியா நேரம் ஒதுக்க மாட்டீங்க. ஏமாற்றத்தை உங்களாலே தாங்கிக்கமுடியாது. காதல்ல தோல்வி வந்துட்டா அதை தாங்கிக்க முடியாது. சிலர் சோக கீதம் பாடுவீங்க. சிலர் வாழ்க்கையை முடிச்சிக்க நினைப்பீங்க. மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரங்க உங்களை மனசார நேசிப்பாங்க.

மீனம்

காதல், காதலி, காதலனிடம் உண்மையாக நடந்துக்க மாட்டீங்க. கழுவுற மீன்ல நழுவுற மீனா இருப்பீங்க. கொஞ்சம் மூடி டைப் ஆசாமி நீங்க. காதலிக்கிற பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்னு கணக்கு செய்வீங்க.

உங்களுக்கு தெய்வபக்தி அதிகம் இருக்கும். மாடர்ன் டிரஸ் பெண்களை வி மங்களகரமாக இருக்கிற பெண்களைத்தான் நீங்க அதிகம் விரும்புவீங்க. கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரங்கதான் அதிகம் உங்களை நேசிப்பாங்க.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like