இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க தமிழர்கள் சாப்பிட்டது இந்த இயற்கை உணவுகளை தான்! இனி தினமும் சாப்பிடுங்க…

உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நோய் நீரிழிவு. நீரிழிவு பாதிப்பைக் குறித்த நேரத்திற்குள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் இதனால் பல அபாயங்கள் ஏற்படக்கூடும். நீரிழிவு காரணமாக உடலின் பல்வேறு பகுதிகள் பாதிக்கக்கூடும்.

உங்கள் தினசரி உணவில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க முடியும்.

உயர் நார்ச்சத்து உள்ள உணவுகள் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுவதால் நீரழிவு நோயாளிகள் இந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை விரைவாக குறைக்கும் சில உணவு பற்றிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

முள்ளங்கி

முள்ளங்கியில் நார்ச்சத்து மிகவும் அதிகம். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. முள்ளங்கியில் எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு மற்றும் சில காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து சாலட் போல் உண்பதால் அதன் நன்மைகள் உங்களுக்கு அப்படியே கிடைக்கின்றன.

பாகற்காய்

எடை இழப்பில் சிறந்த முறையில் உதவும் பாகற்காய், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பாலிபெப்டைடு – பி அல்லது பி-இன்சுலின் என்னும் கூறு பாகற்காயில் உள்ளது. இதனால் நீரிழிவு கட்டுப்படுகிறது.

கேழ்வரகு

கோதுமையில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது . அதனால் நீரிழிவு நோயாளிகள் அதன் அளவைக் குறைப்பது நல்லது. கோதுமைக்கு மாற்றாக நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகைப் பயன்படுத்தலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ராகி என்று அறியப்படும் கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதனால் இதன் ஊட்டச்சத்து மிக அதிகம். நீரிழிவு நோயாளிகள் ராகி தோசை அல்லது ராகி பரோட்டா செய்து சாப்பிடலாம்.

நெளிகோதுமை (Buckwheat)

விரத காலத்து உணவாக அறியப்படுவது இந்த நெளிகோதுமை. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்துகளைக் கொண்ட ஒரு ஆரோக்கிய உணவாக இது கருதப்படுகிறது. குறைந்த க்ளைசீமிக் குறியீடு கொண்ட இந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது.