2020 இல் இந்த ராசியில் வக்ரமடையும் புதன்! இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்… யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா?

கிரகங்களின் ராசி மாற்றம் இந்த மாதம் உள்ளது. கும்பம் ராசியில் உள்ள புதன் வக்ரமடைகிறார். சுக்கிரன்16ஆம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார்.

மாசி 27ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றத்தின்படி கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கும்பம்
நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதங்கள் நிகழப்போகிறது. குபேர யோகம் வந்து விட்டது. காரணம் ராசியில் சூரியன், புதன், இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் சனி, லாப ஸ்தானத்தில் குரு, கேது செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த மாதம் உங்களுக்கு வெற்றிகரமான மாதமாக அமையும். ராசியில் உள்ள சூரியன், குடும்ப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் பண வரவை அள்ளித்தரப்போகிறார். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணம் வரும். சொந்த பந்தங்களினால் திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகிறது.

செய்யும் தொழிலில் லாபங்கள் பல மடங்கு கிடைக்கப்போகிறது. குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகம் நடக்கும்.

இளைய சகோதரர்கள் மூலம் சந்தோஷங்கள் அதிகம் நடைபெறும். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த மாதம் வாய்ப்புகள் வீடு தேடி வரும். குருவின் பார்வை புத்திர ஸ்தானத்தின் மீது விழுவதால் திருமணமான தம்பதிகளுக்கு புத்திரபாக்கியம் தேடி வரும்.

அதே போல களத்திர ஸ்தானத்தின் மீது குரு பார்வை விழுகிறது. கூடவே குடும்ப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் மீது லாப ஸ்தானத்தில் உள்ள செவ்வாயின் பார்வை விழுகிறது. இந்த காலகட்டத்தில் காதல் மலரும். திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளைய தலைமுறையினருக்கு கல்யாணம் கை கூடி வரும்.

சொத்துக்களும் சேரும். குழப்பங்கள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தானாக தேடி வரும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகமாகும். சுப விஷேசங்கள் அதிகம் நடக்கும் மாதமாக மாசி மாதம் அமைந்துள்ளது. பெண்களுக்கு புரமோசன் தேடி வரும், சிலர் புதிய தொழில் அமையும். திடீர் திருமண யோகமும் கை கூடி வரும். அரசு வகையில் லாபங்கள் கிடைக்கும். கடன்கள் தீருவதற்கான நேரம் வந்து விட்டது. சனி பிரதோஷ நாளிலும் சிவராத்திரி நாளிலும் சிவ ஆலயங்களுக்கு சென்று சிவ தரிசனம் பண்ணுங்க நல்லதே நடக்கும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன், புதன் விரைய ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்தில் சனி, தொழில் ஸ்தானத்தில் குரு, கேது, செவ்வாய், சுக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இன்றைக்கு உங்களுக்கு ரொம்ப நல்ல காரியங்கள் நடைபெறும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல மாதம்.

உங்க ராசியில் சுக்கிரன் உச்சமடைந்திருப்பதால் பிரம்மாண்டமான யோகம் தேடி வருது. முகத்தில் பொலிவும் கை நிறைய பணமும் தேடி வரும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. குடும்ப விசயங்கள் எதையும் வெளியில் சொல்லாதீர்கள். ரகசியங்கள் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

வண்டி வாகன யோகம் தேடி வரப்போகிறது. புது வீடு வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் கண் பிரச்சினைகள் வரலாம். ஏழாம் வீட்டு அதிபதி புதன் வக்ரமடைவதால் நீங்க உங்க கணவருடன் வீண் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.

பொறுமையாக இருங்க. இந்த மாதம் சமூகத்தில் நிறைய நல்ல பெயர் கிடைக்கும். புதிய தொழில் எதையும் தொடங்காதீங்க இருக்கிற தொழிலை நன்றாக கவனிங்க அதுவே நல்ல லாபத்தை கொடுக்கும். நண்பர்களினால் நல்ல லாபம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு இது நல்ல மாதம் படிப்பில் அக்கறை காட்டுங்கள். கவனமாகவும் இருங்க அடுத்தவர்களுடன் வீணாக பேச வேண்டாம் வீண் பழிகள் வந்து சேரும். வியாபாரிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் லாபம் வந்து சேரும். அரசியல்வாதிகள் கவனமாக இருங்க.

வெற்றிக்காக நீங்க ராஜதந்திரமாக செயல்பட வேண்டியிருக்கும். குல தெய்வ கோவிலுக்கு போங்க பிரச்சினைகள் தீரும். மாசி சிவராத்திரி நாளில் கண் விழித்து பூஜைகளில் கலந்து கொள்ளுங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like