இன்றைய (16.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் : வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். நிதானத்தோடு செயல்படுவீர்கள்.  உறவினர் வழியில் தொல்லை ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கலாம். கொடுக்கல்–வாங்கல்களில் கவனம் தேவை.

ரிஷபம் :தெளிவு பிறக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும்.வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம் :குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். உறவினர்களால் பலன் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.மனநிம்மதி அடையும்.

கடகம் : உள்ளத்தில் உற்சாகம் ஏற்படும் நாள். விரதம், வழிபாடு  போன்றவைகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் உள்ளம் மகிழ உதவுவர். பயணத்தால் பலன் கிடைக்கும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சிம்மம் : அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் காரணமாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.தனவரவு திருப்தி தரும்.விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி : வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகி மகிழும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல் ஒழுங்காகும். பயணம் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.னேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வீடு,வாங்கும் யோகம் கைகூடும்.

துலாம் : பணியில் ஏற்பட்டு வந்த தடை அகலும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளுவீர்கள்.மாற்று இனத்தவர்களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பயணத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம் : பாராட்டு மற்றும் புகழ் பன்மடங்கு கூடும் நாள். பாதியில் நின்ற பணியானது மீண்டும் தொடரும். பொருளாதார நிலையானது உயரும். நல்ல தகவலை நண்பர்கள் கொண்டு வந்து சேர்ப்பர். பிரபலங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும்.

தனுசு : சொன்ன சொல்லை காப்பற்றி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.புதிய பொறுப்புகள் வந்து சேரும். நெடுத்தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்க வழிபிறக்கும்.சொத்துகள் வாங்க ,விற்க எடுத்த முயற்சியானது வெற்றி பெறும்.

மகரம் : வழிபாடுகளில் சிந்தனையைச் செலுத்தி மகிழும் நாள்.வருமானம் இரட்டிப்பாகும்.  பூர்வீகச் சொத்துகளில் லாபம் கிடைக்கும். மறதியின் காரணமாக பாதியில் நின்ற பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம் : வேண்டாம் என்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். அக்கம்பக்கத்தினரிடம் அளவாகப் பழகுவது நல்லது.நெருங்கிய நண்பர் ஒருவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் ஆனால் செலவுகளும் கவலையை ஏற்படுத்தும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

மீனம் : நினைத்த காரியம் நினைத்தவாறே  நடைபெறும் நாள். நாடு மாற்றச் சிந்தனையானது மேலொங்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.  நாசுக்காகப் பேசி பாக்கிகளை வசுலிப்பீர்கள்.ஆரோக்கியம் சீராகி மனம் உற்சாகமடையும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like