இன்றைய (17.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் :சிந்தனைகள் வெற்றி பெறும். எடுக்க காரியத்தில் வெற்றி கிடைக்கும்.கோபத்தை குறைப்பது நல்லது.கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.

ரிஷபம் :பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணையும் நாள். கனிவான பேச்சினால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

மிதுனம் : கடன்சுமை குறைகின்ற நாள். கனவு பலிக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். பிள்ளைகளால் வருமானங்கள் வரும்.நல்லவர்கள் நட்பு கிடைக்கும். சொத்துத் தகராறுகள் அகலும்.

கடகம் : இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள்.இடம், பூமி வாங்கிச் சேர்க்க அனுபவமிக்க நபர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். நீண்ட நாள் ஆசையொன்று நிறைவேறும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சிம்மம் : வழக்குகளில் வெற்றி கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும்.உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்டுவர். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.சேமிப்பின் பயனை அறிவீர்கள்.

கன்னி : நண்பர்கள் வழியாக நல்ல தகவல் கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். எதிரிகள் விலகுவர். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள்.

துலாம் :நினைத்தது நிறைவேறும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, இடம் வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

விருச்சிகம் : தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். பயணங்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

தனுசு :புகழ் பெற்றவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும்.தடைபட்ட காரியங்களில் தற்போது வெற்றி கிடைக்கும்.உற்சாகமாக பணியில் ஈடுபடுவீர்கள்.வரவு திருப்தி தரும்.

மகரம் : உள்ளம் மகிழுகின்ற தகவல் கிடைக்கும் நாள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பணத்தேவைகள் எதிர்பார்ப்பை விட இருமடங்காக வந்து சேரலாம். புது முயற்சிகள் கைகூடும்

கும்பம் :வளர்ச்சி கூடுகின்ற நாள். குடும்பத்தினர் மத்தியில் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் கொடுப்பர். நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.கட்டிடப் பணி தொடரும்.

மீனம் : செல்வ வளம் பெருகுகின்ற நாள். திடீர் பயணங்கள் ஏற்பட்டு மனமகிழ்ச்சியடைவீர்கள். உத்யோகத்தில் உயர் பதவி வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். இடம் வாங்க சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like