ஆட்டிப்படைக்கும் ஜென்ம சனி! … திருமணம் செய்யலாமா?

திருமணம் செய்வதற்கு கிரக பலன் அதாவது கால நேரம் ஒத்துழைத்தால் மட்டுமே மாலை சூடவும், மணமேடை ஏறவும் முடியும்.

ஜோதிடத்தில் கால நேரம் என்பது திருமண திசை என்று கூறுவார்கள். இந்த திருமண திசை ஜாதகத்தில் நடப்பில் இருந்தால் மட்டுமே திருமண யோகம் வரும்.

அதன் பின் ஜாதகத்தில் குருபலன் எப்படி உள்ளது என்று பார்ப்பதும் மிகவும் அவசியமாகும்.

ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா?

சனி பகவான் சுயம்வரம் செய்ய எந்த தடையும் கொடுக்க மாட்டார், அதனால் ஏழரை சனி நடக்கும் போதும் மாலையும் கழுத்துமாக மணமேடை ஏறலாம்.

ஆனால் இவ்வாறு திருமணம் செய்வது அனைவருக்குமே பொருந்தாது. ஏனெனில் ஏழரை சனி வாழும் காலத்தில் 3 சுற்றுகள் வரும். அவை மங்கு சனி, பொங்கு சனி, மரண சனி என்பன ஆகும்.

ஏழரை சனி என்பது 20 வயதிற்குள் வந்துவிடும். அந்த முதல் சனி சுற்றில் திருமணம் யோகம் என்பது பெண்களுக்கு சாத்தியமாகலாம். ஆனால் சிறிது காலம் தாழ்த்தி திருமணம் செய்வது நல்லது.

அதாவது ஏழரை சனி ராசிக்கு பனிரெண்டு இருந்தால் விரைய சனி, அவர் பெயர்ச்சியாகி, ராசிக்கு வந்தால், அது ஜென்ம சனி, அடுத்த இரண்டரை ஆண்டில் பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு வந்தால் அது குடும்ப சனி என்று கூறுவார்கள்.

ஒருவரின் ஜென்ம ராசியில் சனி இருக்கும் போது திருமணம் செய்யக் கூடாது. அது முதல் சுற்று என்றில்லை, அது எந்த சுற்று சனியாக இருந்தாலும் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் போது திருமணம் மட்டும் செய்யக் கூடாது.

ஏனெனில் அப்படி செய்தால் திருமண வாழ்வில் தீராத பல குழப்பங்கள் வரும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறையும்.

நோய்களின் தாக்கம், குழந்தை பாக்கியம் இல்லாமை, குறைவான மாங்கல்ய பலம் மற்றும் திருமண வாழ்க்கையின் சந்தோஷம் நீங்கி, கஷ்ட நிலைகள் அதிகமாகும்.