மூன்றாம் பார்வையாக குறி வைக்கும் சனி! மகாசிவராத்திரியில் ஏற்படப்போகும் மிக பெரிய மாற்றம்! பிரபல ஜோதிடரின் ஆருடம் பலிக்குமா?

மகா சிவராத்திரி நாளில் கோவிலுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக குடையோடு செல்லுமாறு ஜோதிடர் பாலாஜிஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மார்கழி, தை மாதத்தில் மழை குறைந்து பனி ஆரம்பித்து விடும். மாசி மாதம் பனி முடிந்து வெயில் ஆரம்பிக்கும். இந்த ஆண்டு பிப்ரவரி ஆரம்பம் முதலே வெயிலின் தாக்கம் தொடங்கி விட்டது.

அதிகாலையில் குளிரும் பகல் நேரங்களில் வெயிலும் மாறி மாறி மக்களை தாக்கி வருகிறது. மழைக்கான அறிகுறியே காணப்படவில்லை ஆனாலும் மகாசிவராத்திரி நாளில் மழை வரலாம் என்று கணித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், மழை வரும் நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சுக்கிரன் – புதன் நட்சத்திரத்தில் ரேவதியில் பயணிக்கிறார். சந்திரன் சனியுடன் சேர்ந்து இருக்கிறார். அந்த சனி பகவான் மூன்றாம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார்.

அந்த சுக்கிரன் நின்ற ராசி மீன ராசி மீன ராசியை குறிக்கின்ற திசை வடக்கு செவ்வாய் – சந்திரன் – சுக்கிரன் இந்த 3 கிரகங்களும் இணைகின்ற பொழுது மழை பொழியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.