கவலை வேண்டாம்! கோடி பலனளிக்கும் மகா சிவராத்திரி – தவறவிடக்கூடாத முக்கிய நாள்

ஒவ்வொரு மாதத்திலும் ஒரே ஒரு நாள் மட்டும் வருபவை இந்த அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி ஆகியன. இந்த மூன்றுமே முக்கிய நாட்கள். மாத மாதம் சிவராத்திரி வருகிறது.

ஆனால் மாசி மாதம் கிருஷ்ண பக்‌ஷத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த வருட சிவராத்திரி ஃபிப்ரவரி 21 ம் தேதி வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

இந்த உலகத்தின் இயக்கத்திற்கும் அசைவிற்கும் காரணம் சிவனே என்பது சைவ சமயத்தின் நம்பிக்கை…

இயங்கி கொண்டிருக்கும் இந்த உலகம் ஸ்திதி காலத்தில் களைப்படைகிறது. அப்படி பிரபஞ்சத்திற்கு இழந்து போன சக்தியை மீண்டும் கொடுப்பதற்காக சிவன் தன்னுள் அவ்வுலகத்தை லயப்படுத்துகிறார். இதுவே ப்ரளயம் என்பது.

அப்படி உலகமே இந்த சிவராத்திரி நாளில் சிவனிடம் ஒடுங்குகிறது. இந்த நாளில் அன்னையான பராசக்தி அவளின் குழந்தைகளான நம் மனித குலத்திற்காக சிவனை பூஜித்தாள்.

நமக்காக தேவி சிவனை பூஜித்த இந்த நாளில் நாம் சிவனை பூஜித்தால் தினமும் பூஜை செய்ததை விட பல மடங்கு பலனளிக்கும்.

இந்த மகா சிவராத்திரியில் அறிந்தோ அறியாமலே தெரிந்தோ தெரியாமலோ பூஜை செய்தால் சிவலோகம் அடைவர் என புராணங்கள் கூறுகின்றன. அதே வருடத்தில் மாதந்தோறும் வரும் மற்ற சிவராத்திரியிலும் பூஜை செய்த பலனை இந்த மகா சிவராத்திரி வழிபாடு கொடுக்கும்.

அதிகாலையில் குளித்து தடையில்லாம் விரதம் இருக்க வேண்டும் என சுவாமியை வணங்கிவிட்டு உடல் நிலை நன்றாக இருந்தால் உணவை தவிர்த்தும், உடல் நிலை சரியாக இல்லையென்றால் பழங்கள் உட்கொண்டும், இரவில் கண் விழித்து, 4 கால பூஜை செய்து சிவனை வழிபட்டு அடுத்த நாள் காலையில் பிரசாதம் உண்டு விரதம் முடித்து இரவில் தூங்க வேண்டும்.

இந்த நேரந்தில் சிவ மந்திரங்களை பாராயணம் செய்யலாம், சிவ பாடல்களை பாடலை, தெய்வீக சொற்பொழிவு கேட்கலாம். நம் கவலைகள் அகலவும், பிரச்சனைகள் நீங்கவும், சகல வளங்கள் கிடைக்கவும் சீக்கிரம் அருள் செய்யும் சிவபெருமானை நினைத்து இந்த விரதம் மேற்கொள்ளலாம்….