சாதரண ஜலதோஷத்திற்கும், கொரோனா வைரஸிற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி? எச்சரிக்கை தகவல்

உலகில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கும், ஜலதோஷத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து சீனாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகில் தற்போது வரை 3000-க்கும் மேற்பட்ட உயிரை வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நோயால் சுமார் 98000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், இறப்பு சதவீதம் கூடும் என்று கூறப்படுகிறது.

இதனால் உலகில் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அந்நாட்டை சேர்ந்த அரசாங்கங்கள், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்? அடிக்கடி கைகளை சுத்ததமாக வைத்து கொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கொரோனா வைரஸின் அறிகுறி, தொடர் இருமல், சளி போன்றவை கூறப்படுகிறது. சாதரணமாக ஜலதோஷம் பிடித்தாலும் இப்படி தான் இருக்கும், இதனால் இது இரண்டிற்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது தெரியாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவின் Hong Kong பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Sian Griffiths பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இதைப் பற்றிய வித்தியாசத்தை கூறியுள்ளார்.

சில பேருக்கு இருமினால் கூட கொரோனா வைரஸ் பாதிப்பு தானோ என்ற பீதி இருக்கலாம், ஆனால் இருமல் மூலம் மட்டுமே இதை உறுதி செய்ய முடியாது.

உங்களின் அந்த சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் மார்பு நோயாக உருவெடுத்தால் கொரோனா வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதோடு, அறிகுறிகளாக காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் இருமல் மற்றும் சளி போன்றவை சாதரண ஜலதோஷத்தை விட அதிகமாக இருக்கும், அதுவும் கொரோனா வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிப்பதற்கான வழிகள்
  • உங்கள் கையை அடிக்கடி கழுவுங்கள், குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்பை வைத்து கழுவ வேண்டும்.
  • உங்கள் கைகளை கழுவ முடியாவிட்டால், கை சானிடிசர் ஜெல் பயன்படுத்தவும்.
  • நீங்கள் இருமல் அல்லது தும்மும்போது உங்கள் வாயையும் மூக்கையும், கைகளை வைத்து மூடமால், கையை மடக்கி அதில் தும்மவும்.
  • உடல்நிலை சரியில்லாதவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like