கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க…

சீனாவில் உருவாகி வேகமாக பரவி பலரது உயிரைப் பறித்து வந்த கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் நுழைந்துவிட்டதாக புரளியாக பேசப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது டெல்லியில் ஒருவரையும், தெலுங்கானாவில் ஒருவரையும் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கொடிய நோய் என்று சொல்லப்படுவதற்கு காரணமே, அதற்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாதது தான். மற்றபடி இதுவும் மற்ற வைரஸ் தாக்குதலைப் போன்றது தான்.

எதுவாக இருப்பினும், வருமுன் காப்பதே சிறந்தது என்னும் பழமொழிக்கேற்ப, நம்மை கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் சற்று அதிக கவனம் செலுத்தினால், எப்பேற்பட்ட நோயும் நம்மை அண்டாமல் தடுக்கலாம்.

முக்கியமாக ஆன்டி-வைரல் பண்புகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், எப்பேற்பட்ட வைரஸின் தாக்கத்தில் இருந்தும் பாதுகாப்புடன் இருக்கலாம்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து விடுபட, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவும் ஒருசில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. அந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து உடலை பாதுகாப்புடன் வைத்திருங்கள்.

ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அடிப்படை விஷயங்கள்:

எந்த ஒரு கிருமியும் நம்மை தாக்குவதற்கு நமது பழக்கவழக்கங்களே காரணமாக இருக்கிறது. எனவே எப்போதும் அடிப்படை சுகாதார விஷயமான கைகளைக் கழுவும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். முக்கியமாக வெளியிடங்களில் இருந்தாலோ அல்லது பயணங்களில் இருந்தாலோ, எண்ணெய் வகை சானிடைசரைப் பயன்படுத்துங்கள்.

மேலும் தேவையில்லாமல் கைகள் மற்றும் விரல்களை வாய், கண்கள் மற்றும் மூக்கு பகுதிக்கு கொண்டு செல்லாதீர்கள். அத்துடன், நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள். நன்கு வேக வைக்காத இறைச்சி, பச்சை முட்டை போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

கீழே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில அடிக்கடி உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும்.

துளசியில் ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும். அதுவும் துளசியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். அதுவும் 5 துளசி இலைகளுடன், 3-4 மிளகு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

பூண்டு

பூண்டில் ஆன்டி-வைரல் பண்புகள் ஏராளமாக உள்ளது. இதை பச்சையாகவோ, சமையலில் சேர்த்தோ உட்கொள்ளலாம். பூண்டின் முழு சத்தையும் பெற நினைத்தால், பூண்டு பற்களைப் பொடியாக நறுக்கி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து, ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிடுங்கள். இப்படி செய்தால், நோயெதிர்ப்பு மண்டலம் சீக்கிரம் வலுபெறும்.

பெர்ரிப் பழங்கள்

ரெஸ்வெரட்ரால் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான வேர்க்கடலை, பிஸ்தா, திராட்சை, சிவப்பு மற்றும் வெள்ளை ஒயின், ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் டார்க் சாக்லேட் போன்றவை பூஞ்சை தொற்றுக்கள், புறஊதாக் கதிர் தாக்கங்கள், மன அழுத்தம் மற்றும் காயம் போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவும். அதோடு இவை உடலைத் தாக்கும் வைரஸ்களையும் எதிர்த்துப் போராடி பாதுகாப்பளிக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் மற்றும் கேப்ரைலிக் அமிலம் போன்ற வைரஸ்களை எதிர்த்துப் போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கத் தேவையான உட்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே உங்கள் சமையலில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி

உடலுக்கு பாதுகாப்பு கவசமாக இருந்து பாதுகாப்பளிக்கும் மற்றொரு உணவுப் பொருள் தான் இஞ்சி. இஞ்சியில் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இந்த இஞ்சியை அன்னாசிப்பூ மற்றும் தேனுடன் சேர்த்து உட்கொண்டால், நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படும். அதுவும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, அதில் அன்னாசிப்பூ சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை குடிக்க வேண்டும்.

அன்னாசிப்பூ

அன்னாசிப்பூவில் சிகிமிக் அமிலம் உள்ளது. இது இன்ப்ளுயன்சா வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி வாய்ந்த ஆன்டி-வைரல் பண்புகளைக் கொண்டது. அன்னாசிப்பூவில் உள்ள முழு சத்தையும் பெற நினைத்தால், நீரில் அன்னாசிப்பூவைப் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம் அல்லது க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீயில் சேர்த்தும் குடிக்கலாம்.

வைட்டமின் சி உணவுகள்

நெல்லிக்காய், சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய், ஆரஞ்சு, கொய்யா மற்றும் பப்பாளி போன்றவற்றில் வைட்டமின் சி சத்துடன், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் பண்புகளும் உள்ளன. எனவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற நினைத்தால், தினமும் வைட்டமின் சி உணவுகளை உட்கொள்ளுங்கள்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like