கொரோனா வைரஸ் தடுக்கும் சானிட்டைஸர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்..!

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுகாதாரமாக இருப்பது குறித்து விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மாஸ்க் அணிவது, பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, முக்கியமாக கைகளை நன்கு கழுவுதல் மட்டுமன்றி வைரஸ் தொற்றுகள் பரவாமல் இருக்க சானிட்டைசர் பயன்படுத்துவதும் அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.

தற்போதைய சுகாதார அவசரத்தால் சானிடைஸர்களுக்கான பற்றாக்குறையும் இருந்து வருவதால் அதை வீட்டிலேயே எப்படித் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
  • ஐசோபுரொப்பைல் ரப்பிங் ஆல்கஹால் (Isopropyl rubbing alcohol)-161 மில்லி லிட்டர்.
  • கற்றாழை ஜெல் – 79 மில்லி லிட்டர்.
  • வாசனை எண்ணெய் – ஒரு துளி .
செய்முறை :

சானிடைஸர் செய்யத் தயாராகும் முன் கைகளை நன்குக் கழுவுங்கள்.

ஒரு பவுல் மற்றும் ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றையும் நன்குக் கழுவிக் கொள்ளுங்கள்.

அந்த பவுல் நன்குக் காய்ந்த தண்ணீர் துளிகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பவுலில் ஆல்கஹாலை ஊற்றுங்கள்.

அடுத்ததாக கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்குக் கலக்குங்கள். இரண்டும் சீராகக் கலந்திருக்க வேண்டும்.

தேவைப்பட்டால் வாசனைக்காக ஒரு துளி வாசனை எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம்.

தற்போது மூன்றையும் நன்கு கலக்க வேண்டும்.

கலந்த பின் ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி மூடியால் நன்கு மூடிக்கொள்ளுங்கள்.

இப்போது ஹாண்ட் சானிடைஸர் தயார்.

கைகளை கழுவினாலும், பல இடங்களில் பல பொருட்களையும் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், இத்தகைய சானிட்டைசரை கைகளில் தேய்த்துக்கொள்வது பலன் தரும்.

கவனிக்க வேண்டியவை:

ஆல்கஹால் 99 சதவீதமும் கற்றாழை 1 சதவீதமும் இருக்க வேண்டும். எனவே அளவுகளில் கவனம் அவசியம்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like