சனிபகவானின் பிடியில் இருப்பவரா நீங்கள்.. வாழ்வில் துன்பங்கள் மட்டுமே துரத்துகிறதா?.. இதை மட்டும் செய்தால் போதும்!

சனி பகவான் மிகவும் வலிமை வாய்ந்த கிரகமாக இருக்கிறார். பார்த்தவுடன் பிடித்து கொள்ளும் ஆற்றல் அவரிடம் உண்டு. அதனால் தான் சனி பகவானை வணங்கும் போது நேரெதிரே நிற்காமல் சாய்வாய் நின்று வணங்குவார்கள்.

சனியின் நேர்மைக்கும், நீதி தவறாமல் கடமை ஆற்றும் பண்பிற்கும் தான் ஈசனே தம் பெயரை பட்டமாக அளித்து சனீஸ்வரன் என்று கௌரவப்படுத்தினார். அத்தகைய பெருமை வாய்ந்த சனி பகவானுக்கு மிகவும் பிடித்தவர் ஈசன்.

எம்பெருமான் மீது சனிக்கு அளப்பரிய பக்தி உள்ளது. எனவே சிவபெருமானுக்கு திங்கள் கிழமைகளில் காராம் பசுவின் பால் கொண்டு அபிஷேகம் மற்றும் வில்வ அர்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் சனியின் தாக்கம் குறையும்.

சனி பகவான் சன்னதியில் சனிக்கிழமை தோறும் சென்று நல்ல தேங்காய் ஒன்றை வாங்கி உடைக்க வேண்டும். உடைத்த அந்த இரு முடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.

எள்ளு கொண்டு கருப்பு துணியில் முடிச்சி போட்டு விற்கப்படும் எள்ளு முடிச்சை நல்லெண்ணெயில் நனைத்து கொள்ள வேண்டும். அதன் திரியில் தீபம் ஏற்றி மனதார வழிபட வேண்டும். தீபம் ஏற்றும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்லது.

சனி பகவான் ஸ்லோகம்:
  • நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
  • க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
  • சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
  • ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:

இவ்வாறு 9 வாரம் வழிபட்டு வந்தால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். துன்பம் நீங்கி நிம்மதி கிடைக்க பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.