கொரோனா வைரஸ் நாட்டில் இருந்து எப்போது விலகும்?.. ஜோதிடம் கூறும் தகவல் இதோ…!

இந்த கொரானா வைரஸானது இயற்கையின் பாதிப்பாக இருந்தாலும் சரி, செயற்கையாக உருவாக்கப்பட்ட பாதிப்பாக இருந்தாலும் சரி. பிரச்சனை என்ற ஒன்று நமக்கு வந்துவிட்டது.

எப்படி வந்தது என்பதை பற்றி ஆராய்ச்சி செய்யாமல், இதை எப்படி சரி செய்யலாம்? நம்மை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த பிரச்சனை எப்போது நம்மை விட்டு நீங்கும் என்பதைப் பற்றி யோசிப்பதே நல்லது.

நம்மையெல்லாம் மரண பயத்தில் தள்ளியிருக்கும், கண்ணுக்கு தெரியாத வைரஸானது 14-4-2020 சித்திரை மாதம் தொடங்கும் வரை, நம்மை மேலும் மேலும் அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கும் என்று ஜோதிடர்களால் பஞ்சாங்கத்தைப் பார்த்து சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆனால் 14-6-2020 வைகாசி மாதம் முடியும் போது நம் பிரச்சனைகளும் கண்டிப்பாக ஒரு முடிவுக்கு வரும் என்ற ஆறுதலையும் நமக்காக ஜோதிடம் சொல்லி இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அப்படி என்றால் இந்தக் காலகட்டம் வரை, பிரச்சனையை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா? என்று பயந்து விட வேண்டாம்.

ஜோதிட ரீதியாக பிரச்சனைகள் வரும் என்று சொல்லப்பட்டாலும், இந்த பிரச்சனைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளும் சக்தியும் மனிதர்களிடம் அதிகமாகவே உள்ளது.

சரி. வரக்கூடிய நாட்களில் சாதாரண மனிதர்கள் தங்களுடைய பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது? இந்த கொரானாவில் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள, சமூக ஒற்றுமையோடு, அரசு என்ன சொல்கிறதோ, அதை கேட்கவேண்டும். இதுதவிர அவரவர் உடலை ஆரோக்கியத்துடனும் கவனத்துடனும் பாதுகாத்துக் கொள்வது அவரவர் கடமை.

மேலும், நம்மை நாமே ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிக அவசியம்.

உங்களால் முடிந்தவரை குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கு நெல்லிக்காய், தக்காளி, கொய்யா பழம், போன்ற விட்டமின் C, சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட கொடுக்கலாம்.

இதை சாப்பிட்டால் கொரானா வராதா! என்ற கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எந்தவிதமான வைரசும் நம்மை சுலபமாக தாக்க முடியாது. அதன் பின்பு உங்களது கையை நன்றாக சோப்பு போட்டு கழுவுவது மிக நல்லது.

நம்பிக்கையுடன் வீட்டிலேயே இருந்தால் இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வந்து விடலாம். நம்பிக்கையோடு நம்மையும், நம் சுற்றி இருப்பவர்களையும் காப்போம்..