உச்சம் பெற்ற சூரியனோடு மாத இறுதியில் இணையும் புதன்! யாருக்கெல்லாம் ஆபத்து? இந்த ராசிக்கு காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்

ஏப்ரல் மாதம் மீனம் மாதமும் மேஷம் மாதமும் இணைந்த மாதம். சூரியன் மீனம் ராசியில் பாதி நாட்களும், மேஷம் ராசியில் பாதி நாட்களும் ஆக சஞ்சரிப்பார்.

ஏப்ரல் மாதம் மேஷம் ராசியில் சூரியன் உச்சம் பெறும் மாதம். இந்த மாதம் மகரத்தில் செவ்வாய் உச்சம், சனி ஆட்சி, குரு நீசபங்க ராஜயோகம், ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது.

இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் கடகம் ராசிக்காரர்கள் நன்மையும் தீமையும் கலந்திருக்கிறது.

உலகம் முழுவதும் நோய் தாக்குதல் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில் நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து அனைத்து ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஏப்ரல் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கும் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கடகம்
கடகம் ராசிக்கு கிரகங்களில் சில சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கிறது. 12ஆம் வீட்டில் ராகு, 11ஆம் வீட்டில் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிலும் பத்தாம் வீட்டிலும் சூரியன் சஞ்சரிக்கிறார்.

புதன் சஞ்சாரம் எட்டு, ஒன்பது பத்தாம் வீடுகள் வரை இருக்கிறது. ஆறாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த மாதம் வேலையில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்க ஆற்றல் அதிகமாகும்.

உங்க வருமானம் அதிகமாகும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். எதையும் எடுத்து செய்யக்கூடிய திறமை அதிகமாகும். குடும்ப வாழ்க்கையில கவனமாக இருங்க.

சும்மாவே கொரோனா பயத்தில எல்லோரும் வீட்டோட முடங்கி இருக்கீங்க. ஒரே வீட்ல ஒண்ணா இருப்பது போல உங்க களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் சனி, குரு சேர்ந்து சஞ்சரிப்பதால ரொம்ப கவனமாக இருங்க. உங்க பெர்சனல் வாழ்க்கையில விட்டுக்கொடுத்து போங்க.

திருமணம் செய்தவர்கள், காதலிப்பவர்கள் தேவையில்லாத பேச்சுக்களை பேசாதீங்க. சொந்த வாழ்க்கையில பிரச்சினை வரப்போகுது அதே நேரம் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளியே இணக்கமான சூழ்நிலை நிலவும்.

லாபாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில ஆட்சி பெற்று அமர்வது ரொம்ப நல்ல விசயம். உங்க தொழில்ல லாபம் கிடைக்கும்.

உங்க நிதி நிலைமை இந்த மாதம் நல்லாவே இருக்கும். அரசு துறை, மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகம் வரும்.

உங்க தனாதிபதி சூரியன் மாத பிற்பகுதியில் பத்தாம் வீட்டில் உச்சம் பெறப்போகிறார். இதனால் தன வரவு அதிகமாகும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். வீட்டில் இருந்தே வேலை செய்தாலும் வேலைப்பளு அதிகமாகும்.

இந்த மாதம் திருமண பேச்சுவார்த்தைகள் வேண்டாம். புதன் பகவான் உங்களுக்கு இந்த மாதம் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டார். குரு பார்வை உங்களுக்கு கிடைப்பது நேர்மறை எண்ணம் அதிகமாகும். சகோதரர்கள், சகோதரிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அரசு துறையில் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அற்புதமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு இந்த மாதம் எட்டாம் வீட்டில் சூரியன் ஆறாம் வீட்டில் செவ்வாய், சனி, குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் கேது ஏழாம் வீட்டில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாத முற்பகுதியில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க காரணம் எட்டாம் வீட்டில் உங்க ராசி அதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார்.

கோபமாக பேசாதீங்க. வண்டி வாகனங்களில் வெளியே போகவே போகாதீங்க. போனாலும் அடிதான் விழும் வீட்டுக்குள்ள இருக்கும் போதும் சண்டை சச்சரவு வீணான விவாதங்கள் வரும் கவனமாக பேசுங்க. இப்ப இருக்கிற சூழ்நிலையில ரொம்ப அமைதிய இருங்க.

ஆறாம் வீட்டில் செவ்வாய் சனி, குரு கூட்டணி உங்களுக்கு சில தடைகள் வரலாம். எதிரிகள் தொல்லை நீங்கும் அதே நேரத்தில் குருவும் அங்கு மறைந்து இருப்பதால் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எதிர்ப்பும் தடைகளும் ஏற்படும்.

சூரியன் மாத பிற்பகுதியில் பாக்ய ஸ்தானத்தில் உச்சமடைகிறார். சுக்கிரன் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று மாளவியா யோகம் தருகிறார்.

பிசினஸ்ல நல்ல வெற்றிகள் கிடைக்கும் அதிர்ஷ்டம் தேடிவரும். புதிய வேலைகள் கிடைக்கும். சில சமயங்களில் வேலை பிசினஸ் எல்லாம் குழப்பமாகவே இருக்கும் மனதில் தளர்ச்சி அடையாதீங்க இன்றைக்கு உலகமே ஒரு பீதியிலயும் குழப்பத்திலயும்தான் இருக்குது எனவே கவலைப்படாதீங்க.

மாணவர்கள் படிப்பில கவனமாக இருங்க. மாறி மாறி அட்வைஸ் கொடுப்பாங்க. நீங்க யோசிங்க மாத இறுதியில் உச்சம் பெற்ற சூரியனுடன் புதன் இணையும் போது நல்ல முடிவாக எடுங்க. நின்னு நிதானித்து யோசித்து முடிவு பண்ணுங்க.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமாவது நல்லா இருக்கீங்களான்னு கேட்கறீங்களா? ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு அதிசாரமாக சஞ்சரிக்கிறார் கூடவே சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது.

ஆறாம் வீட்டில் புதன், ஏழாம் வீட்டில் சூரியன், ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார்.

பத்தாம் வீட்டில் ராகு, நான்காம் வீட்டில் கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த மாதம் உங்களுக்கு ரொம்ப நல்லதாகவே நடக்கும். பணம் வருமானம் வரும். திடீர் அதிர்ஷ்டம் வரும். உங்க வாழ்க்கை துணை மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு பணம் வேண்டாம் வீட்டிற்குள்ளேயே இருக்கீங்க உங்க வேலைக்கு ஒத்துழைப்பு கொடுப்பாங்க.

குடும்ப வாழ்க்கையில உதவியாக இருப்பாங்க. அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சில நாட்களிலேயே உங்க ராசி அதிபதி புதன் ஏழாம் தேதி ஏழாம் வீட்டில் நீசம் பெற்று சஞ்சரிப்பது சுமாரான அமைப்புதான். மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டில் உச்சம் சூரியனால் வயிற்றில் சில பிரச்சினைகள் வரும்.

வீட்டிலேயேதான இருக்கீங்க இப்பவே அதுக்கு தகுந்த மாதிரி சத்தான சாப்பாடா சாப்பிடுங்க. எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கலாம். வெளியே எங்கேயும் பயணம் வேண்டாம்

புதன் மாத இறுதியில் உச்சம் பெற்ற சூரியனோடு எட்டாம் வீட்டில் இணைகிறார். கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க.

ஐந்தாம் வீட்டில் உள்ள மூன்று கிரகங்கள் உங்க லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் சில ஆதாயங்களும் நன்மைகளும் கிடைக்கும், பண விசயங்களில் சில முன்னேற்றங்கள் வரும்.

சில குழப்பங்கள் வரலாம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்னாடியும் ஒருதடவைக்கு இரண்டு தடவை தெளிவா பேசி முடிவு பண்ணுங்க.

திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். பயணங்களும் வேண்டாம். இந்த மாதம் சராசரியான மாதம்தான்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like