ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. விருச்சிக ராசியினர்களுக்கு காத்திருக்கும் யோகம்..!

விருச்சிக ராசிக்காரர்களே இதுநாள் வரை கலக்கத்தில் இருந்த உங்களுக்கு ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். பாத சனி படுத்தி எடுத்தாலும் இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெருமை புகழையும் தருவார்.

இதுநாள் வரை 3-ஆம் இடத்தில் இருந்த கேது இப்பொழுது 2ம் இடத்திற்கும், 9-ல் இருந்த ராகு 8-ம் வீட்டிற்கும் வருகிறார்கள். ராகு கேதுவினால் இதுவரையிலும் பலவிதங்களிலும்சிரமப்பட்ட நீங்கள், இனி ஓரளவு நிம்மதி அடைவீர்கள்.

சிலரின் ஆலோசனையைக் கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித் தவித்தீர்களே, இனி சரியான பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

சுபகாரியம்
ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும் வந்து சேரும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.

சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம்.

வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான முதலீடுகளை தவிர்க்கப்பாருங்கள். யாருக்கும் பணம் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்வது நல்லது.

ராகு நிழல் கிரகம் என்பதால் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். அலுவலகத்தில் சலுகைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். சிலருக்கு திறமைக்கு ஏற்ற வேலையும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

திருமணம்
இதுநாள் வரை தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் வாக்கு, தன ஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் சிலரை தேடி வரும். பணவரவுக்கு ஏற்ப விரைய செலவுகளும் தேடி வரும். தூக்க குறைபாடு அதனால் மன உளைச்சல் ஏற்படும். வெற்றியைத் தேடித் தரும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் நன்மைகளே அதிகம் நடக்கும்.