யாழில் சமுர்த்தி நிவாரணம் வழங்குவதில் மக்களுடன் முரண்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தருக்கு ஆப்பு – அரசாங்க அதிபரின் அதிரடி நடவடிக்கை

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரன்பாடாக நடந்துகொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட சமூர்த்தி பணிப்பாளரை கோரியுள்ளதாகவும், விசாரணை முடிவில் குறித்த உத்தியோகத்தர் முறைகேடாக நடந்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்குவதற்கும் பணித்துள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

விசாரணை இடம்பெறும் இந்த காலகட்டத்தில் தற்காலிகமாக குறித்த சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யும்படியும் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஆழியவளை சமுர்த்தி உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் நன்றி செலுத்தியுள்ளார்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like