முந்திரிப்பழம் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்……!

நாம் வாங்கும் முந்திரிப்பழத்தின் மருத்துவ குணத்தை தெரிந்துகொண்டால், தினமும் அதை சாப்பிட நினைப்போம்.

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.நாம் முந்திரிக் கொட்டைகளையை அதிகம் சாப்பிடுகிறோம். ஆனால், முந்திரி பழங்களை பலர் பயன்படுத்துவதில்லை. உண்மையில் முந்திரிப்பழம் நம் உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையது. அதற்கு காரணம்முந்திரிப் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருள்.
இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது.இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம்.
முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது. வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகிறது.பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகிறது.
மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகிறது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.பழத்தில் உள்ள டானின் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like