உங்க ராசிப்படி எந்த மாதத்தில் திருமணம் செய்ய வேண்டும் தெரியுமா? அப்படி நடந்தால் வாழும் போதே சொர்க்கத்தை பார்க்கலாம்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது ராசியானது நம்முடைய திருமண வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

அதேசமயம் நமது ராசியின் படி எந்த காலகட்டத்தில் திருமணம் செய்தால் நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதையும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்த பதிவில் உங்கள் ராசிப்படி எந்த மாதத்தில் திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
இந்த ராசி கோடையின் தொடக்கத்திற்கு மிகவும் பொருத்தமானது. ஜோதிட சாஸ்திரத்தின் படி ஜூன் மாதம் இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்ற மாதமாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்வது உங்கள் திருமண வாழ்க்கையை அற்புதமானதாக மாற்றும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் வசந்த காலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் பிறந்த மாதத்தை ஒட்டிய மாதங்களில் திருமணம் செய்து கொள்வது இவர்களுக்கு நல்லது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திருமணம் செய்து கொள்ளும் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

மிதுனம்
பொதுவாக மிதுன ராசிக்காரர்கள் தங்களின் திருமணம் குறித்து பல கனவுகளை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மே மாதம் திருமணம் செய்து கொள்வது திருமணம் குறித்தும் திருமண வாழ்க்கை குறித்தும் இவர்கள் கொண்டிருக்கும் கனவுகளை நிறைவேற்றுவதாக மாற்றும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே வீடு மற்றும் குடும்பம் சார்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரும் கூடும் நாளில் தங்களின் திருமணத்தை நடத்த விரும்புவார்கள். இவர்களின் திருமணம் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுவது இவர்களின் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றும். புத்தாண்டு முடிந்த கையோடு திருமணம் செய்வது இவர்களின் காதல் வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கவன ஈர்ப்பை அதிகமா விரும்புவார்கள். தங்களின் திருமண நாளை அனைவரும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள். ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடத்தப்படுவது இவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதுடன் இவர்களின் திருமண வாழ்க்கையில் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்கள். திருமணத்திற்கும் இவர்களிடம் பல திட்டங்கள் இருக்கும். மார்ச் அல்லது செப்டம்பர் மாதம் இவர்கள் திருமணம் செய்துகொள்ள சிறந்த மாதங்களாகும். அவை இரண்டும் ஒரு புதிய பருவத்தின் தொடக்கத்தையும் புதிய ஆற்றல்களின் தொகுப்பையும் குறிக்கின்றன.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் காதலின் அடையாளமாவர். இவர்களிடம் ஒரு நட்பு மனப்பான்மையும், மக்களை கவர்ந்திழுக்கும் இயற்கையான வசீகரமும் உள்ளது. இவர்களின் இருப்பை அனைவரும் எப்போதும் விரும்புவார்கள், ஏனெனில் இவர்களின் வருகை அனைவரையும் மகிழ்ச்சியாக்கும். இவர்கள் வாழ்க்கையில் எப்போது வேண்டுமென்றாலும் இவர்களால்ளால் புதிய ஒருவரை இணைத்துக் கொள்ள முடியும், அதனால் வருடத்தின் எந்த மாதமும் இவர்களுக்கு சிறப்பானதுதான். ஆனால் அக்டோபர் மாதம் இவர்களின் திருமண வாழ்க்கையை கூடுதல் மகிழ்ச்சியானதாக மாற்றும்.

விருச்சிகம்
இவர்கள் அனைத்தையும் தீவிரமாக சிந்திக்கக் கூடியவர்கள். இவர்களின் காதல் எப்பொழுதும் சிக்கலும், பொறாமையும் நிறைந்ததாக இருக்கும். இவர்கள் நவம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்வது இவர்களுக்கு நல்லது. எந்த மாதத்தில் திருமணம் செய்தாலும் அதிக உணர்ச்சிவசப்படுவதை இவர்கள் தவிர்க்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் இருப்பதால் மக்கள் இவர்களைச் சுற்றி இருப்பதை விரும்புகிறார்கள். இவர்களின் திருமணம் டிசம்பர் அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்துவது இவர்களின் இல்லற வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் அனைத்திலும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். அதனால் திருமணத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்கள் உழைப்பின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள் எனவே வேலைதான் இவர்களுக்கு எப்பொழுதும் முதல் இடத்தில் இருப்பது. எனவே இவர்கள் திருமணம் செய்துகொள்ள நிதானமான ஒரு மாதத்தை விரும்புகிறார்கள். ஜனவரி மாதம் இவர்களுக்கு திருமணம் செய்துகொள்வது அதிர்ஷ்டத்தை வழங்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மாற்றத்தை விரும்புவார்கள், எளிதில் யூகிக்கக்கூடிய விஷயங்கள் இவர்களை சலிப்பை ஏற்படுத்தக்கூடும். இவர்கள் உள்ளுணர்வுகளை கேட்டு வாழ்க்கையை நடத்துபவர்கள். பிப்ரவரி மாத திருமணம் இவர்களுக்கு சுவாரஸ்யமான திருமண வாழ்க்கையை வழங்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து பல கனவுகளில் வாழ்வார்கள். துணையுடன் ஆழமான உறவை வளர்த்துக்கொண்டு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது இவர்களின் விருப்பமாக இருக்கும். மார்ச் மற்றும் ஜூன் மாதம் இவர்களின் இந்த கனவுகளை நிறைவேற்றும் மாதமாக இருக்கும். இந்த மாதங்களில் திருமணம் செய்வது இவர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை கொண்டுவரும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like