நாளை திங்கட்கிழமை 13.04.2020 இரவு 7 மணி 26 நிமிடமளவில் சார்வரி வருடமானது பிறக்கின்றது.
விஷேட புண்ணியகாலம்
13.04.2020 மாலை 03 மணி 26 நிமிடம் முதல் முன் இரவு 11 மணி 26 நிமிடம் வரையுள்ள காலப்பகுதியாகும்.
புதுவருட கொண்டாட்டங்கள்
14.04.2020 செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடலாம்.
சங்கிரமதோஷ நட்சத்திரங்கள்
அச்சுவினி, கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகினி, மிருகசீரிடம் 1,2ம் பாதங்கள், மகம், மூலம், பூராடம் 1ம் கால் இந்த நட்ஷத்திரத்தில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் வைத்து நீராடவும்.
வெள்ளை நிறமான பட்டாடைகளையும் வெள்ளை நிறத்து கரைகள் அமைந்த புத்தாடைகள் அணிந்து மகிழுங்கள்.
முத்துப் பதித்த ஆபரணங்களை அணியலாம். மங்களப் பொருள்களில் முகம் கலந்து நித்திய கர்ம அனுஷ்டானங்களைச் செய்து குலதெய்வ வழிபாடுகளோடு ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்கள் செய்து அர்தமுள்ள வருடமாக்குங்கள்.
கைவிஷேட காலம்
14.04.2020 செவ்வாய்க்கிழமை
சூரிய உதயத்தின் முன் 4.45 மணிமுதல் 5.30 மணிவரையும்
பகல் 11.30 மணிமுதல் 12.30 மணிவரையும்
16.04.2020 வியாழக்கிழமை
காலை 7.30 மணிமுதல் 9.00 மணி வரைக்கும் பிற்பகல் 03.05 மணிமுதல் 04.05 மணி வரை மாலை 4.15 மணி முதல் 05.45 மணி வரை
20.04.2020 திங்கட்கிழமை
பகல் 12.05 முதல் 01.30 மணி வரை
புது விருந்துண்பவர்கள்
20.04.2020 திங்கள் 9.30 மணியின் பின்னர் 01.30 முன்னருக்கும்.
ஆதாய விரையங்கள்
மேடம், கடகம், விருச்சிகம் – சமசுகம் – 5 வரவு 5 செலவு
இடபம், துலாம் – சுகம் 14 வரவு, 11செலவு
மகரம் கும்பம் – லாபம் 11 வரவு 5 செலவு
சிங்கம் – அதிகலாபம் 14 வரவு 2 செலவு
தனுசு,மீனம் – நஷ்டம் 8 வரவு 11 நஷ்டம்
மிதுனம், கன்னி – பெருநஷ்டம் 8 வரவு 11 செலவு
சார்வரி வருடத்தில் முன் மழை பெய்யும் வாய்ப்புண்டு. அதிகமான வெப்பமாக இருக்கும். மக்கள் வாழ்வுகள் அச்சத்தோடே கழியும். இராஜ நீதிகள் பிறழ்வுகளைச் சந்திக்கலாம்.
சிறுதான்ய உற்பத்திகள் பெருகும். பின் மழை செறிவாக இருக்கும். தாழ்வான பூமியில் வெள்ளம் வரலாம்.
மிதமான செலவுகள் – சுமைகளை மக்கள் எதிர்கொள்வர். அதிகார வர்க முரண்பாடுகள் தொடரும்.






