மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும்.
உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
மகிழ்ச்சியான நாள். உங்களின் கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பளிப்பார்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்றைய நாள் குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் இருந்த பிரச்சினைகள் விலகும். திடீர் பயணம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
கடந்தகால முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்றைய நாள் உங்கள் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் உள்ள மந்தநிலை மாறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.
மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரியமானவர்களுடன் அதிகமான நேரத்தை செலவழிப்பீர்கள். நிதிவிவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன் திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மன அமைதி பெற தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். கனவு நனவு ஆவதற்கான வாய்ப்புகள் தோன்றும். மற்றவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வீர்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்றைய நாள் உங்களுக்கு நல்ல பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் மதிப்பு கூடும். குடும்பத்தில் தாராள பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
அமைதி காப்பீர்கள். மற்றவர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். உங்களுக்குள் மறைந்துள்ள திறமைகளை இனங்கண்டறிந்து வெளிக்கொணர்வீர்கள்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியில் சுப செலவுகள் வந்து சேரும். தொழில் வியாபார ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறைய சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது.
கிரகங்களின் சாதகமான பார்வையினால் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வீர்கள். பணப்பற்றாக்குறையை சரிசெய்வீர்கள். நீண்டகால முதலீட்டுத்திட்டங்களில் பணம் முதலீடு செய்வீர்கள்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் சிலருக்கு பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே எச்சரிக்கை தேவை. குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.
எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவீர்கள். மற்றவர்களின் உதாசீன கருத்துகளை புறந்தள்ளுவீர்கள். புதிய வாழ்க்கைக்காக உறுதிமொழிகளை ஏற்க துணிவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்றைய நாள் உங்களுக்கு வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.
வாழ்வின் யதார்த்தத்தை உணர்வீர்கள். தன் கையே தனக்குதவி என்பதை எக்காலத்திலும் மறக்கமாட்டீர்கள். மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்றைய நாள் நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும்.
மனதிற்கினிய செயல்கள் நடந்தேறும். பால்யகால நண்பர்களை சந்திப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம்
மகர ராசியினருக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
மனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். சிரிப்பே அனைத்து கவலைகளுக்கும் அருமருந்து என்பதை உணர்வீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்றைய நாள் பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். வழக்கமான நடைமுறைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். எண்ணிய காரியம் முடிய தேவையான அளவிற்கு பிரயத்தனம் மேற்கொள்வீர்கள்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் சில இடையூறுகளுக்குப் பின் கிடைக்கும். உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் குறையும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
மகிழ்ச்சியான நாள். நீங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்பீர்கள். நிதிவிவகாரங்களில் மேன்மைத்தன்மை இருக்கும். உடல்நலத்தில் அசட்டுத்தைரியம் வேண்டாம்.






