அதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்

மூக்கு மேல இருக்கிற மச்சம் வளர்ந்துகொண்டே இருக்கு, இதை எடுத்தே ஆக வேண்டும் அம்மா. மச்சத்தை எடுத்து நெத்தியில் பொட்டா வைச்சுக்க”னு என ப்öரண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க, எனப்புலம்பும் மகள் “அதிர்ஷ்ட மச்சத்தை எடுக்கவேண்டுமென்று சொல்றியே மூக்கில் மச்சம் இருந்தால் சவால்களை சந்திக்கிற தைரியம் வரும் என்று மச்ச சாஸ்திரம் சொல்லுதுடி’ எனச்சொல்லும் அம்மா.
அதிர்ஷ்டத்தின் அடையாளம் மச்சம் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. கை கால் போன்ற இடங்களில் இருந்தால் யாரும் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால் அனைவரது பார்வையில் படும்படி அழகைக் கெடுக்கும் விதத்தில் முகத்தில் மச்சம் இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மச்சம் பெரிதாகிக்கொண்டே சென்றால் அவர்களின் அவஸ்தை பலமடங்கு அதிகரிக்கிறது.
மச்சத்தை தழும்பு இல்லாமல் நீக்க முடியுமா?
“உடலின் வெளிப்புறத் தோலில் மச்சம் வளரக்கூடியது. மெலனோசைட்ஸ் (Melanocytes) மற்றும் நீவுஸ் (Nevus) செல்களில் இருந்துதான் பெரும்பாலும் மச்சம் வளர்கின்றது. உடலில் செல்பிரியும்போது மச்சம் தோன்றுகிறது.
பெரும்பாலும் மச்சம் நாம் பிறக்கும்போதே இருக்கும். சிலருக்கு எப்போது வேண்டுமானாலும் மச்சம் வரலாம். நடுத்தர வயதில் மறைந்தும் விடலாம் மறையாமலும் இருக்கலாம்.
மச்சம் பெரும்பாலும் கறுப்பு நிறத்திலேயே இருக்கும். ஒரு சில மச்சம் சிவப்பு அல்லது பிரவுண் நிறத்திலும் இருக்கும். சிவப்பு நிறத்தில் வளரும் மச்சம் ஆஞ்சியோமா எனப்படும் இரத்தக்குழாய் செல்பிரிவின்போது ஏற்படுபவை .
சிலருக்கு கடுகு அளவிலும் சிலருக்கு மிளகு அளவிலும் மச்சம் இருக்கும். இப்படிப் பெரிதாகும் மச்சத்தினை வளர்ந்துவரும் தொழில்நுட்பம் மூலமாக முற்றிலும் நீக்க முடியும்.
லேசர், ரேடியோ ப்ரிக்வன்சி (Radio Frequency) மற்றும் அறுவை சிகிச்சைக்கென மூன்று முறைகளில் மச்சம் நீக்கப்படுகிறது. மச்சத்தின் அளவு. இருக்கும் இடத்தைப் பொறுத்துத்தான் எந்தவிதமான சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை டாக்டர் தீர்மானிப்பார்.
மச்சத்தை நீக்கிய பிறகும் சில மச்சங்கள் மீண்டும் வளரும் தன்மை கொண்டவை. அப்படி உள்ள சில மச்சங்களை சத்திரசிகிச்சை மூலமாகத்தான் சரிசெய்ய முடியும். தழும்புகள் தெரியாமல் இருக்க சில வகை கிரீம்களை பயன்படுத்தி சரிசெய்துவிடலாம்.
மச்சம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து அரிப்பு, ஒரே மச்சத்தினுள் பல நிறங்கள் போன்றவை சற்று கவனிக்க வேண்டிய மச்சங்கள். அந்த மச்சத்தை பயோப்சி பரிசோதனை செய்து புற்றுநோய்க்கான அறிகுறியா அல்லது சாதாரண மச்சமா எனத் தெளிவாக்கிக்கொள்ளலாம்.
எனவே அதிர்ஷ்டம் என்று அலட்சியமாக இருந்துவிடாமல் முறையான பரிசோதனை செய்து மச்சத்தைப் பற்றிய சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
மச்சம் பற்றிய மருத்துவ ஆய்வு
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக்குழு மச்சம் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் ப ல ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்தன. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கின்றன என்றும் ஒஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும் ஆரோக்கியமான கண்களும் இதயமும் இருக்கும் என்றும் தோல் சுருக்கம் குறைவாக இருக்கும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like