குறி வைக்கும் குரு..! ஆட்டிப்படைக்கும் போகும் அஷ்டமத்து சனியே லாபத்தை அள்ளி கொடுக்க எட்டி பார்க்கிறார்

ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரம் கிரகங்கள் சஞ்சாரம் அற்புதமாக இருக்கின்றன.

கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறியுள்ளன மேஷம் ராசியில் சூரியன்,புதன், ரிஷபம் ராசியில் சுக்கிரன் மிதுனம் ராசியில் ராகு தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் சனி, செவ்வாய், குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். ஊராடங்கு நீடிக்கும் இந்த கால கட்டத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. உங்க ராசியில் சூரியன் உச்சம் பெற்றுள்ளார் கூடவே புதன் சஞ்சரிக்கிறார். 2ஆம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருக்கிறார். மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் குரு, சனி, செவ்வாய், சஞ்சரிக்கின்றனர்.

புதன் உங்க ராசியில் உச்சம் பெற்ற சூரியனோடு இணைந்திருக்கிறார் இது சுபமான வாரம் சந்தோஷமும் நிம்மதியும் கொண்ட வாரமாக அமையும். இந்த வாரம் உங்களுக்கு தொழிலில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. அதுவே உங்களுக்கு மன உளைச்சலை தரலாம். குடும்பத்தில் குழப்பங்கள் வாக்குவாதங்கள் வரலாம். உங்க பேச்சில இனிமை இருக்கும் அதே நேரத்தில யாரையும் குற்றம் குறை சொல்லாதீங்க யோசித்து பேசுங்க.

பதவியில் மாற்றங்கள் வரலாம். அதே நேரம் தொழிலில் வேலையில் சில பிரச்சினைகள் வரலாம். இப்போது இருக்கிற சூழ்நிலையில் அலுவலக பிரச்சினைகள் வரலாம் அதை தீர்க்க பாருங்க. ராகு கேதுவினாலும் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தும் நிம்மதி இல்லாம இருக்கே என்று யோசிக்கலாம் உங்க சுய ஜாதகம் எப்படி இருக்கு, என்ன தசாபுத்தி நடக்குதுன்னு பாருங்க. அதற்கேற்ப பரிகாரம் பண்ணுங்க.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன், உங்க ராசிநாதன் சுக்கிரன் உங்க ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, குரு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. காரிய தடைகள் நீங்கும். சுப காரியங்கள் கைகூடி வரும்.

குருவின் பார்வை உங்களுக்கு கிடைப்பதால உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த பிரச்சினைகளையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். உங்களுடைய புகழ் கூடும். சகோதரர்களின் ஆதாயம் கிடைக்கும். பெரிய அளவில் முதலீடு எதுவும் பண்ணாதீங்க. வியாபாரத்தில் இந்த வாரம் லாபம் வரலாம். விரையங்கள் வரலாம் கவனமாக இருங்க பணத்தை பத்திரப்படுத்துங்க. இருக்கிற வேலையை விட்டுட்டு புது வேலைக்கு முயற்சி பண்ணாதீங்க கொஞ்சம் காத்திருங்க. திடீர் வருமானம் வரும் அதே நேரம் கடன் பிரச்சினையும் வரும்.

உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. அரசு சார்பான உதவிகள் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதற்காகவும் பதற்றம் வேண்டாம் உங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்கும். கொரோனா வைரஸ் பிரச்சினையால் பணம் முடங்கிக் போச்சேன்னு வருத்தப்படாதீங்க. ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம் கவனமாக இருங்க.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசியில் ராகு, களத்திர ஸ்தானத்தில் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சனி, செவ்வாய், குரு, லாப ஸ்தானத்தில் சூரியன்,புதன்,விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்குதேன்னு நினைக்கறீங்களா?
செலவுகள் அதிகமாக இருக்கு. விரைய செலவுகள் அதிகம் வரலாம் குடும்பத்தில இருக்கிறவங்க என்ன சொன்னாலும் கூல் ஆக ஹேண்டில் பண்ணுங்க.

உங்க குழந்தைகளிடம் மனசு விட்டு பேசுங்க. கணவன் மனைவி உறவில் சில பிரச்சினைகள் வரலாம், தேவையற்ற விவாதங்கள் மனக்குழப்பங்கள் வரலாம் எல்லோரும் இப்ப வீட்ல இருக்காங்க எதையும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் பேசுங்க. இந்த வாரம் உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். உடன்பிறந்தவர்கள் உதவி கிடைக்கும்.

இப்போதைக்கு சுப காரிய பேச்சுவார்த்தை எதுவும் வேண்டாம். காதலை புரபோஸ் பண்ண இது நல்ல வாரம் இல்லை. ஊரடங்கு இருக்கிற இந்த கால கட்டத்தில நீங்க வீட்டை விட்டு வண்டி வாகனத்தில போகாதீங்க அப்புறம் தேவையில்லாத வம்பு வழக்குகள் வரலாம் கவனமாக இருங்க.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் சூரியன்,புதன், லாப வீட்டில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் ராகு, ஏழாம் வீட்டில் சனி, செவ்வாய்,குரு, ஆறாம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். குடும்ப உறுப்பினர்களிடம் கவனமாக பேசுங்க. எதையும் யோசித்து செயல்படுங்க. எதிர்பாலின நண்பர்களிடம் பேசும் போது கவனம்.

மூன்று கிரக சேர்க்கை ஏழாம் வீட்டில் இருப்பதால் ரொம்ப ஜாக்கிரதை. யாரிடமும் பேசி வம்புல மாட்டிக்காதீங்க. தேவையில்லாத அவப்பெயர்கள் வரலாம். வீட்டில் இருந்தே வேலை செய்தாலும் வேலைப்பளு அதிகமாகும். இந்த வாரம் திருமண பேச்சுவார்த்தைகள் வேண்டாம். புதன் பகவான் உங்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு எந்த பிரச்சினையும் செய்ய மாட்டார்.

உங்களின் நேர்மறை எண்ணம் அதிகமாகும். சகோதரர்கள், சகோதரிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வேலையில் புரமோசனும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அரசு துறையில் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அற்புதமாக இருக்கும்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, ஒன்பதாம் வீட்டில் சூரியன்,புதன், பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு, ஆறாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுக்கிரனால் உங்களுக்கு வருமானம் வரலாம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீங்க.

அப்பாவின் பேச்சை கேளுங்க. அவங்க உடல் ஆரோக்கியத்திலயும் கவனமாக இருங்க. உங்க வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் மருத்துவர்களை கலந்து ஆலோசனை பண்ணுங்க. வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் கிடைக்கும் அதிர்ஷ்டம் தேடிவரும். பணம் அதிகம் செலவு செய்தால் கடன் பிரச்சினைகள் வரலாம் கவனம்.

பணம் விசயமாக சில நேரங்களில் குழப்பங்கள் வரலாம் மனதளவில் தளர்ச்சி அடையாதீங்க தைரியமாக இருங்க. கவலைப்படாதீங்க. மாணவர்கள் படிப்பில கவனமாக இருங்க. எந்த முடிவு எடுத்தாலும் நிதானமாக யோசித்து முடிவு பண்ணுங்க.

கன்னி
புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன், புதன், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் ராகு ஐந்தாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு, நான்காம் வீட்டில் கேது இணைந்திருக்கிறார்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி அதிகாலை 1.05 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வீண் வம்பு வழக்குகள் வேண்டாம். ஊரடங்கு உள்ள இந்த கால கட்டத்தில் எப்போதும் வீட்டிற்குள்ளேயே இருங்க எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. உங்க பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. நண்பர்களால் சில பிரச்சினைகள் வரலாம். வீடு வாங்க முயற்சி பண்ணுவதற்கான நல்ல வாரம். பேச்சுவார்த்தை சுபமாக முடியும். வயிற்றில் சில பிரச்சினைகள் வரும்.

வீட்டிற்குள்ளேயே இருப்பதால் சத்தான சாப்பாடு சாப்பிடுங்க. எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கலாம். வெளியே எங்கேயும் வண்டியில போகாதீங்க கவனமாக இருங்க. திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். பண விசயங்களில் சில முன்னேற்றங்கள் வரும். சில குழப்பங்கள் வரலாம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்னாடியும் ஒருதடவைக்கு இரண்டு தடவை தெளிவா பேசி முடிவு பண்ணுங்க.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன் ஏழாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார் கூடவே புதன் இணைந்துள்ளார். நான்காம் வீட்டில் சனி, செவ்வாய், குரு முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். என்னதால் வீட்டில் இருந்து வேலை செய்தாலும் வேலை பளு அதிகரிக்கும். உங்க குடும்பத்தில் வாழ்க்கைத்துணையோடு சில பிரச்சினைகள் வரலாம். வீடுகளை பராமரிப்பு பண்ணுவதாற்கான நேரம் இது என்றாலும் கொஞ்சம் நேரம் பார்த்து பண்ணுங்க. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ உதவி தேவைப்படும். அம்மா உடன் பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்க உறவினர்களிடம் கவனமாக இருங்க.

தொழிலில் வேலையில் மாற்றங்கள் வரலாம். நல்ல வேலையாக இருந்தா மட்டுமே மாற பாருங்க. திருமண பேச்சுவார்த்தை எதுவும் வேண்டாம் காரணம் அதற்கான சாதகமான நேரம் இல்லை. துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஏப்ரல் 25 அதிகாலை 1.15 மணி முதல் ஏப்ரல் 27 காலை 11.46 மணிவரைக்கும் உள்ளதால் கவனம் தேவை. ஊரடங்கு உள்ள இந்த கால கட்டத்தில் எப்போதும் வீட்டிற்குள்ளேயே இருங்க எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன், புதன் ஆறாம் வீட்டிலும் சனி செவ்வாய்,குரு மூன்றாம் வீட்டிலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். சுக்கிரன் ஏழாம் வீட்டிலும் எட்டாம் வீட்டில் ராகு ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

குருவின் பார்வை ஏழாம் வீட்டின் மீது விழுவதால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். இந்த வாரம் லாபங்கள் நிறைந்த வாரம். திருமண பேச்சுவார்த்தையில் இருந்த தடைகள் நீங்கும். மனதளவில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்க லைப் பார்ட்னர் மூலம் ரொம்ப நல்ல உதவி கிடைக்கும். உங்க சகோதரர்கள் மூலம் நிறைய நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். சொத்துக்களை வாங்கலாம்.

உங்களிடம் இருக்கும் சொத்துக்களை லாபத்திற்கு விற்பனை செய்யலாம். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி காலை 11.46 மணி முதல் ஏப்ரல் 29 காலை 7.58 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஊரடங்கு உள்ள இந்த கால கட்டத்தில் எப்போதும் வீட்டிற்குள்ளேயே இருங்க எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன், புதன் ஆறாம் வீட்டிலும் சனி செவ்வாய்,குரு மூன்றாம் வீட்டிலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். சுக்கிரன் ஏழாம் வீட்டிலும் எட்டாம் வீட்டில் ராகு ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். குருவின் பார்வை ஏழாம் வீட்டின் மீது விழுவதால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.

நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். இந்த வாரம் லாபங்கள் நிறைந்த வாரம். திருமண பேச்சுவார்த்தையில் இருந்த தடைகள் நீங்கும். மனதளவில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்க லைப் பார்ட்னர் மூலம் ரொம்ப நல்ல உதவி கிடைக்கும். உங்க சகோதரர்கள் மூலம் நிறைய நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். சொத்துக்களை வாங்கலாம். உங்களிடம் இருக்கும் சொத்துக்களை லாபத்திற்கு விற்பனை செய்யலாம்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி காலை 11.46 மணி முதல் ஏப்ரல் 29 காலை 7.58 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஊரடங்கு உள்ள இந்த கால கட்டத்தில் எப்போதும் வீட்டிற்குள்ளேயே இருங்க எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

தனுசு
குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் சூரியன், புதன் ஐந்தாம் வீட்டிலும் ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு, இரண்டாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு உங்க ராசியில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்துள்ளது. தனுசு ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 29 காலை 7.58 மணிக்கு மேல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க. வீட்டில் கூட தேவையில்லாமல் வாயை திறக்காதீங்க.

ஊரடங்கு உள்ள இந்த கால கட்டத்தில் எப்போதும் வீட்டிற்குள்ளேயே இருங்க எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. இரண்டாம் வீட்டில் உள்ள மூன்று கிரக சேர்க்கையால் சில பிரச்சினைகள் வரலாம். பெண்கள், கர்ப்பிணிகள் கவனமாக இருங்க. பிரச்சினைகள் அதிகமாகி பின்னர் தீர்வு வரும் மருத்துவ ஆலோசனை அவசியம்.

புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரலாம். திடீர் மகிழ்ச்சிகள் வந்து திக்குமுக்காட வைக்கும். வருமானத்திற்கு ஒரு வழி பிறக்கும். வெற்றிகள் தேடி வரும். அதிர்ஷ்டமும் பாக்கியமும் கிடைக்கும். மாணவர்கள் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மகரம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்க ராசியில் சனி, செவ்வாய், குரு, உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் கேது, நான்காம் வீட்டில் சூரியன், புதன், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உடல் உஷ்ணம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க.

நரம்பு பிரச்சினைகள் வரலாம். உச்சம் பெற்ற செவ்வாய் உச்சம் பெற்ற சூரியன் பார்ப்பதால் ஏகப்பட்ட சிக்கல்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. வேலை விசயமாக நிறைய நன்மைகள் நடக்கும். உங்களுக்கு பெர்சனல் வாழ்க்கையில நிறைய மாற்றங்கள் ஏற்படும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலையில் சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும் என்றாலும் கவனமாக இல்லாட்டி ஏமாந்து போயிருவீங்க.

கும்பம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன், புதன், நான்காம் வீட்டில் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சனி, செவ்வாய், குரு லாப ஸ்தானத்தில் கேது, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இது சுகமான வாரம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். ஏழரை சனி நடப்பதால் விரைய செலவுகள் அதிகம் வரத்தான் செய்யும் கவனமாக இருங்க. பணத்தை சேர்த்து வைக்காவிட்டால் பிரச்சினை வரலாம் கவனம். நிதி நிலைமை சுமாராக இருக்கு. கணவன் மனைவி உறவில் பிரச்சினை வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க.

திருமணம் சுப நிகழ்ச்சிகள் பேசுவதற்கு இது சாதகமான வாரம் இல்லை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க. கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டார். விழிப்புணர்வோடும் எச்சரிக்கையாகவும் இருங்க.

மீனம்
மீனம் ராசிக்காரர்களே இந்த வாரம் இரண்டாம் வீட்டில் சூரியன்,புதன் சஞ்சரிக்கிறார். மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாய்,குரு சஞ்சரிக்கின்றனர். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க பிள்ளைகளுக்கு ரொம்ப நல்லது நடக்கும்.

உங்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகம் வரும் அதே நேரத்தில் மருத்துவ செலவுகள் வரலாம். உங்க அலுவலகத்தில் இருந்து சந்தோஷமான செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. கண், வயிறு பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கை. உங்க வியாபாரத்தில் சாதகமாக இருக்கும் லாபமும் தேடி வரும். வருமானம் ஒன்றுக்கு இரண்டாக வரும். குடும்பத்தினர் ஆதரவு வரும். வங்கிக் கடன் கிடைக்கும்.

புதிய முதலீடுகள் செய்ய இது சாதகமான வாரம். புது சொத்து சேர்க்கைகள் ஏற்படலாம். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் சந்தோஷங்கள் தேடி வரும். இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்கிறது. படிப்பு விசயத்தில மாணவர்கள் யோசித்து முடிவு பண்ணுங்க.