பெண்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது?

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை எந்த சரும பிரச்சனைகளும் வருவதில்லை. பருவமடைந்த வயதில் முகப்பருக்கள் வரும் அதற்கு சில இயற்கை பொருட்களை பயன்படுதினாலே போதுமானது. பதினெட்டு வயதிற்கு முன்னால் முகத்தில் அதிக கெமிக்கல்களை பயன்படுத்துவது மற்றும் பார்லர்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.
உங்கள் சருமம் இயற்கையான அழகுடன் தான் இருக்கும். அதை பணத்தை செலவு செய்து கெடுத்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு பார்லர் சிகிச்சைகளை செய்து கொள்ளவும் ஒரு வயது இருக்கிறது. உங்களது தோழிகள் இப்போதே செய்துகொள்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அவற்றை செய்ய வேண்டாம்.

திரெட்டிங்
டீன் ஏஜ் பருவத்தில் கன்னங்கள், உதடுகளின் மேல், புருவங்கள் ஆகியவற்றில் முடி அதிகமாக வளரும். அதை உடனே எடுத்து விட வேண்டும் என்று பார்லருக்கு போக வேண்டாம். எடுக்க எடுக்க தான் அதிகமாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு முறை திரெட்டிங் செய்துவிட்டால் அது வளர்ந்த உடன் மீண்டும் திரெட்டிங் செய்ய கூடாது. நன்றாக வளர்ந்த உடன் திரெட்டிங் செய்யுங்கள்.
மசாஜ் ஸ்பா
மசாஜ் ஸ்பாவிற்கு 25 வயதிற்கு மேல் செல்வது சிறந்தது. 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வேலைப்பழு மற்றும் குடும்ப சுமை இருக்கும் இவர்கள் மசாஜ் ஸ்பா எடுத்துக் கொள்ளலாம். சின்ன வயதிலேயே மசாஜ் ஸ்பாவிற்கு அடிமையாக வேண்டாம்.
ஹேர் ஸ்டைலிங்
ஹேர் ஸ்டைலிங் செய்ய விரும்பினால் ஏதாவது முக்கியமான இடங்கள் அல்லது விஷேசங்களுக்கு செல்லும் போது மட்டும் செய்து கொள்ளலாம். அடிக்கடி செய்வது முடியை பழாக்கிவிடும்.

வாக்சிங்
குட்டை பாவடைகளை பள்ளி சீருடைகளாக அணிய வேண்டும் என்றால் வாக்சிங் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் இதை முதல் முறையாக செய்யும் போது வலியை உண்டாக்கும். வாக்சிங்கை முதலில் காலில் செய்து பார்த்து விட்டு படிப்படியாக கைகள் மற்றும் முகத்திற்கு செய்வது நல்லது.

ஹேர் கட் மற்றும் ஹேர் வாஷ்
ஹேர் கட் மற்றும் ஹேர் வாஷ் செய்வது நாம் சிறு வயதில் இருந்து செய்து வருவது தான். இருப்பினும் டீன் ஏஜ்ஜில் நீங்கள் உங்களது முகத்திற்கு ஏற்றவாறு ஹேர் கட் செய்வது அவசியம். மிகவும் சிறியதாக ஹேர் கட் செய்தால் உங்களை அதிகமாக காட்டிவிடும். எனவே உங்கள் அம்மா அல்லது அக்காவின் ஆலோசனைப்படி ஹேர்கட் செய்யலாம்.

பிளிச்சிங்
பிளிச்சிங் செய்வது ஆரம்பத்தில் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றத்தை கொடுத்தாலும் அது முகத்திற்கு கெடுதலை விளைவிக்க கூடியது. கண்டிப்பாக பிளிச்சிங் செய்தே ஆக வேண்டும் என்றால் இயற்கையான பிளிச்சிங்கை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like